நாடின் கார்டிமர்
தென்னாப்பிரிக்க பெண் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாடின் கார்டிமர் (Nadine Gordimer, நதீன் கோர்டிமர், நடின் கோர்டிமர் 20 நவம்பர், 1923 - சூலை 13, 2014) தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆவார். தென்னாப்பிரிக்க அரசின் நிறவெறிக்கொள்கையை எதிர்த்து எழுதியவர். 1991 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றவர். 1974 இல் புக்கர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. இலக்கியத்தோடு அரசியல் நடவடிக்கைகளிலும், சமூக அபிவிருத்தி விடயங்களிலும் ஊக்கம் காட்டியவர். தென்னாபிரிக்காவில் வெள்ளையர் ஆட்சி நடைபெற்ற காலகட்டத்தில் சுதேச கறுப்பு இனமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு இன ஒதுக்கல் முகங்களையும் 15 நாவல்கள், பல சிறுகதைத்தொகுதி, கட்டுரை நூல்கள் மற்றும் படைப்புக்கள் மூலம் வெளிக்கொணர்ந்தவர்.
Remove ads
பிறப்பு
தென்னாப்பிரிக்காவில் ஸ்பிரிங்க்சு என்னும் ஊரில் பிறந்தார். கார்டிமரின் தாய் தந்தையர் யூத இனத்தைச் சேர்ந்தவர்கள்[1][2]. கார்டிமரின் தாயார், கருப்பின மக்கள் கல்வி பெறமுடியாமல் அல்லல் உறுவதைக் கண்டு வருந்தி கருப்பினக் குழந்தைகளுக்காக மழலைப் பள்ளியைத் தொடங்கினார்[3]. தாயைப் போல கார்டிமரும் கருப்பின மக்கள் படும் துன்பதைக் கண்டு வருந்தினார். அந்தப் பரிவும் அன்பும் அவர் வாழ்வின் இறுதி வரை தொடர்ந்தன. அவருடைய புதினங்களிலும் கதைகளிலும் நிறவெறியினால் ஏற்படும் கறுப்பின மக்களின் அவலங்களை விவரித்து எழுதினார்.
Remove ads
கல்வி
இவர் கத்தோலிக்க கன்னியர் மட பாடசாலை ஒன்றிலேயே கல்வி கற்றார். பின்னர் விற்வாட்டர்ஸ்ரான்ட் பல்கலைக்கழகத்தில் ஒருவருட காலம் படித்தார். ஆனாலும் இவர் அங்கு தனது பட்ட படிப்பை பூர்த்தி செய்யவில்லை.
படைப்புகள்
இளம் அகவையிலேயே எழுதத் தொடங்கினார். இவரது இருதயம் பலவீனமாக இருந்தது எனக்காரணம் காட்டி இவரது தாயார் இவரை பெரும்பாலும் வெளியில் செல்லாதவாறு வீட்டிலேயே தங்கவைத்தார். தனியாக வீட்டுக்குள் அடைபட்டு கிடந்த நடின் கோர்டிமர் கதைகள் எழுத ஆரம்பித்தார். இவர் தனது 15 வது வயதில், 1937 இல் சிறுகதை எழுத ஆரம்பித்தார். 16 வது வயதில் வாழ்ந்தோருக்கான இவரது படைப்பு பிரசுரமானது. கார்டிமரின் முதல் கதை அவருடைய 15 ஆம் அகவையில் வெளி வந்தது[4]. 24 நூல்கள் எழுதியுள்ளார். அவற்றில் புதினங்கள் மட்டும் 15 ஆகும். மூன்று புத்தகங்கள் நிறவெறி அரசினால் தடை செய்யப்பட்டன. இவருடைய படைப்புகள் 30 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு முனைவர் பட்டங்கள் 15 க்கும் மேல் இவருக்கு வழங்கப்பட்டன. இவரது கதைகள் பெரும்பாலும் உள்ளூர் தென்னாபிரிக்க சஞ்சிகைகளில் பிரசுரமாகின. இச்சிறுகதைகளில் பல தொகுக்கப்பட்டு "நேருக்கு நேர்" (Face To Face) என்னும் பெயரில் 1947 இல் பிரசுரிக்கப்பட்டது. 1951 இல் நியூயோக்கர் பத்திரிகை இவர் எழுதிய ஏ வாட்சர் ஒவ் த டெட் என்ற கதையை ஏற்றுப் பிரசுரித்தது. இதன் மூலம் இவர் பரவலாக பொதுமக்களால் அறியப்பட்ட ஒரு எழுத்தாளரானார். இவரின் முதலாவது நாவலான தி லையிங் டேயிஸ் 1953ஆம் ஆண்டு நூலாகப் பிரசுரிக்கப்பட்டது.
வாழ்க்கை
இவர் 1949 இல் ஜெரால்ட் காவ்றன் என்ற பல் வைத்தியரை திருமணம் புரிந்தார். இத்திருமணத்தின் மூலம் 1950 இல் இவரது மகள் ஒறியன் பிறந்தாள் (1950). மூன்று வருடத்தின் பின் இவரது மணவாழ்வு முறிந்து விட்டது. 1954 இல் மீண்டும் இவர் மிகவும் மதிப்புப்பெற்ற ஓவிய வியாபாரியான றீன்ஹோல்ட் கஸ்ஸிறர் என்பவரைத் திருமணம் புரிந்தார். இம்மண வாழ்க்கை றீன்ஹோல்ட் கஸ்ஸிறர் 2001 இல் நோயுற்று இறக்கும்வரை நீடித்தது. இத்திருமணத்தின் மூலம் 1955 இல் இவரது மகன் ஹூகோ பிறந்தான். ஹூகோ நியூயோர்க்கில் திரைப்படத் தயாரிப்பாளராக உள்ளார்.
Remove ads
பிற ஈடுபாடுகள்
எழுத்து உரிமை, பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றுக்காகவும் குரல் கொடுத்தார். எச் ஐ வி, எயிட்சு போன்ற நோய்களை ஒழிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஒரு தனி நாடோ, சமுதாயமோ, கண்டமோ தனித்த ஒரு மனிதப் பண்பாட்டைப் பிற நாடுகளுக்குப் போதிப்பதும் பரப்புவதும் கூடாது என்னும் கருத்தை வலியுறுத்தினார். கார்டிமர் தனிமையை விரும்புபவர். எளிதில் நட்புக் கொள்ள மாட்டார். பல ஆண்டுகள் சிறையில் இருந்து விடுதலைப் பெற்ற நெல்சன் மண்டேலாவை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறினார்.
Remove ads
ஆவணப்படங்கள்
நடின் கோர்டிமர் தனது மகனுடன் இணைந்து இரண்டு ஆவணப்படங்களைத் தயாரித்திருக்கிறார்.
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads