நந்தினி (செயற்பாட்டாளர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நந்தினி ஆனந்தன் (Nandhini Anandhan), தமிழ்நாடு முழுவதும் ஐந்து ஆண்டுகளாக மது எதிர்ப்பு இயக்கத்தை நடத்திவரும் சட்டக்கல்லூரி மாணவியாவார். இவர் தனது தந்தையாருடன் இணைந்து மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது இடங்களில் விழிப்புணர்வு இயக்கங்களை நடத்தி வருகிறார். இவரது போராட்டங்களுக்காக, 2016 ஆம் ஆண்டு வரையான நிலவரப்படி, 55 முறை கைது செய்யப்பட்டுள்ளார்.[1][2][3][4][5][6][7].

மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டம்

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களை முதல்வர் நேரில் சந்தித்து மீட்பு பணிகளை மேற்கோள்ள வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையிலுள்ள முதலமைச்சர் இல்லம் முன்பாக சட்டக்கல்லுாரி மாணவி நந்தினி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள முயன்றார். இதை அறிந்த காவல்துறையினர் 2017 ஆம் ஆண்டு திசம்பர் 7 அன்று கைது செய்து அழைத்துச் சென்றனர்.[8][9][10]

முக்கியமான போராட்டங்கள்

நெல்லை கலெக்டரிடம் கந்துவட்டி கொடுமை தொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகம் முன்பு தனது 2 குழந்தைகள், மனைவியுடன் இசக்கிமுத்து என்பவர் தீக்குளித்தார். இந்த படுகொலைக்கு காரணமான நெல்லை கலெக்டரை கைது செய்யக்கோரி மதுரை நந்தினி தந்தை ஆனந்தனுடன் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்.[11]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads