நந்தினி (புராண மிருகம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நந்தினி என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் தேவ லோகத்தில் வாழ்கின்ற பசுவான காமதேனுவின் மகளாவள். காமதேனுவிற்கு பட்டி என்ற மற்றொரு மகளும் உண்டு.[1]
நதியாக மாற்றிய சாபம்
பஞ்சத்திலிருந்து ஊரினை மீட்க ஜபாலி முனிவர் என்பவர் இந்திரனை நோக்கி யாகம் செய்தார். தேவலோகத்தில் வாழும் கேட்டதைத் தருகின்ற பசுவான காமதேனுவினால் பஞ்சம் அழியும் என்று, காமதேனுவினை பூமிக்கு அனுப்புமாறு வேண்டினார். காமதேனு வருணலோகம் சென்றிருந்ததால், அதன் மகளான நந்தினியை இந்திரன் பூலோகம் செல்லுமாறு பணித்தார்.
ஆனால் நந்தினி பூலோகத்திற்கு செல்ல மறுத்துவிட்டது. இந்திரன் பணித்தும், நந்தினி பூமிக்கு வர மறுத்தமையால், ஜபாலி கோபம் கொண்டு நதியாக மாறி பூலோகத்திற்கு வருமாறு சாபமிட்டார். அதனால் நந்தினி நதியாக மாறி பூமிக்கு வந்தார். [2]
மேலும் நாக வம்சத்தில் நந்தினி எனும் சக்தி நாகம் இருந்ததாகவும் அதவே அம்மனின் கிரீடத்தை அலங்கரிக்கும் வல்லமைக் கொண்டதாகவும் நாக புராணம் விவரிக்கிறது.மேலும் நாகங்களின் பூஜையில் நந்தினி வசிய பூஜை சிறப்பானதாகக் கருதப்படுகிறது.நாகதேவதைகளில் சக்தி வாய்ந்த தேவதையாகவும் நந்தினி விளங்குகிறது.
Remove ads
கருவிநூல்
கட்டீல் தலபுராணம்
காண்க
ஆதாரம்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads