நனிசைவவியல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நனிசைவவியல் அல்லது நனிசைவப் படிப்பு (Vegan studies) அல்லது நனிசைவக் கோட்பாடு (vegan theory) என்பது நனிசைவம் குறித்த கல்வியாகும். மனிதம்சார் மற்றும் சமூக அறிவியலுக்குள் வரும் இது நனிசைவச் சிந்தனையை ஒரு அடையாளக் கல்வியாகவும் சித்தாந்தக் கல்வியாகவும் பயிலச்செய்து நனிசைவத்தைப் பற்றியும் இலக்கியம், கலைத்துறைகள், சமூகக் கலாச்சாரம், ஊடகங்கள் ஆகியவற்றில் அதன் சித்தரிப்பைப் பற்றியும் ஆராயும் ஒரு கல்வித்துறையாகும்.[1] இச்சொல்லின் குறுகிய பயன்பாட்டில், நனிசைவவியல் என்பது நனிசைவத்தை ஒரு "சிந்தனை மற்றும் எழுத்து" முறையிலும் "விமர்சன வழிமுறையாகவும்" நிறுவ முயலும் ஒரு கல்வித்துறையாகும்.[2]

பல்வேறு துறைகளோடு ஒன்றுபட்டு செயற்படவல்ல நனிசைவவியல் விலங்குகளின் பண்ட அந்தஸ்து,[3] ஊன்வாதம்,[4] சுற்றுச்சூழல் பெண்ணியத்துடனான (ecofeminism) நனிசைவம்,[5] நிறப் பகுப்புடனான (race) நனிசைவம்,[6] மற்றும் காலநிலை மாற்றத்தில் விலங்கு வளர்ப்பின் பங்கு[7] உள்ளிட்ட பிரச்சினைகளைப் பற்றிப் பிரதானமாக விவாதிக்கின்றது. சீரிய விலங்குக் கல்வியியலோடு நெருங்கியத் தொடர்புடைய நனிசைவக் கல்வியியலானது,[8] சீரிய நிறக் கோட்பாடு (critical race theory), சுற்றுச்சூழல் கல்வியியல் மற்றும் சூழலியல் திறனாய்வு, பெண்ணியக் கோட்பாடு, பின்காலனித்துவம், பின்மனிதத்துவம், கோணல் கோட்பாடு எனப் பல்வேறு துறைகளாலும் தகவல் பரிமாற்றத்திற்கு உட்பட்டதாகவும்[9] பல்வேறு அனுபவ மற்றும் கோட்பாடு ரீதியான ஆராய்ச்சி முறைகளை உள்ளடக்கியதாகவும் விளங்குகிறது.[10]

முதன்முதலில் 2010-களில் கல்வித்துறையில் நுழையத் துவங்கிய நனிசைவவியல், 2015-ஆம் ஆண்டு லாரா ரைட் என்ற ஐக்கிய அமெரிக்க அறிஞரால் முறையான படிப்புத் திட்டமாக முன்மொழியப்பட்டது.[11][12]

Remove ads

தரவுகள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads