நமது நெல்லைக் காப்போம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நமது நெல்லைக் காப்போம் என்பது இந்தியாவின் பாரம்பரிய நெல் ரகங்களை கண்டுபிடித்து பாதுகாக்கும் செயல் திட்டமாகும். இந்தச் செயல் திட்டத்தை கிரியேட் என்கிற ஓர் தன்னார்வத் தொண்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்த செயல் திட்டத்தில் இந்தியாவின் பாரம்பரிய பல்வகை நெல்களைக் காப்பது தொடர்பான பரப்புரை, அவற்றின் மருத்துவக் குணங்கள் குறித்த பரப்புரை, விதை உற்பத்திக்காக ஒரு உழவர் வலைப்பின்னல், இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு போன்ற பணிகள் இந்த செயல் திட்டத்தில் அடங்கும்.[1]
விதை நெல்கள் பாதுகாக்கப்பட அவை பயிரப்பட வேண்டும். அதற்காக கிரியேட்அமைப்பு அரிய விதை நெல்களை சேகரித்து விவசாயிகளுக்கு 2 கிலோ நெல்லை இலவசமாகத் தருவர். விவசாயிகள் அதைப் பயிரிட்டு 4 கிலோவாக அடுத்த ஆண்டு திருப்பித் தர வேண்டும்.[2]
நமது நெல்லைக் காப்போம் தமிழ்நாட்டு ஒருங்கிணைப்பாளர் கட்டிமேடு ஜெயராமன் ஆவார்.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads