நம் நாடு (2007 திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

நம் நாடு (2007 திரைப்படம்)
Remove ads

நம் நாடு (Nam Naadu) திரைப்படம் 2007-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சுரேஷ் இயக்க, ரமேஷ் தயாரித்தார். இத்திரைப்படத்தில் ஆர். சரத்குமார், கார்த்திகா மேத்யூ, நாசர், விஜயகுமார், ஸ்ரீமன், பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைன் என்ற மலையாளப் படத்திலிருந்து மறு ஆக்கம் செய்யப்பட்டத் திரைப்படமாகும். எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்று, லைன் பெற்ற வெற்றியை இப்படம் பெறத் தவறியது குறிப்பிடத்தக்கது.[1]

விரைவான உண்மைகள் நம் நாடு, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

கதைச்சுருக்கம்

கல்வித் துறை மந்திரியாக இருக்கும் ஆளவந்தாருக்கு (நாசர்) முதல் மந்திரி ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவரது மருமகன்களான சத்யா (சரண்ராஜ்) மற்றும் இளமாறன் (பொன்வண்ணன்) ஆளவந்தாருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். மருமகன்களின் யோசனைப் படி மாநிலத்தின் அமைதியைக் குலைத்து, தற்போதைய முதல் மந்திரிக்கு இடையூறு ஏற்படுத்தினார் ஆளவந்தார்.

ஆளும் கட்சியின் இளைஞர் அணித் தலைவராக இருக்கும் முத்தழகு (சரத்குமார்) தன் தந்தையான ஆளவந்தாரின் நடவடிக்கைளைத் தெரிந்துகொண்டு எதிர்த்து வந்தான். சத்யா, இளமாறன், ஆளவந்தார் ஆகியோர் சேர்ந்து ஒரு குளிர் பானம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஒரு கிராமத்து இடத்தை ஒதுக்குகிறார்கள். அந்த கிராமத்து மக்கள் அந்த நடவடிக்கையை எதிர்த்தனர். ஆனாலும் அங்கே தொழிற்சாலை கட்ட அரசு அனுமதி வழங்கியது. அந்த மாவட்டத்தின் ஆட்சியரை (இளமாறன்) சந்திக்க இயலாமல் போனதால், தொழிற்சாலை கட்டுவதற்கு இடைக்கால தடை உத்தரவு வேண்டி நீதிமன்ற வாசலை நாடினான் முத்தழகு.

மக்களைக் காப்பாற்ற தேர்தலில் சுயேட்சையாக நிற்க முடிவெடுத்தான் முத்தழகு. ஆளவந்தாரை எதிரித்து தேர்தலில் வெற்றி பெற்று, உள்துறை மந்திரி பதவியும் பெற்றான் முத்தழகு. மிகவும் நேர்மையாகயும் மக்கள் நலன் கருதியும் சட்ட நடவடிக்கைகளை எடுத்தான் முத்தழகு. அது முதல் மந்திரிக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. அதை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஆளவந்தார், தன் மருமகன்களுடன் சேர்ந்துகொண்டு முத்தழகுக்கு எதிராகத் திட்டம் போட்டார். ஆனால் ஆளவந்தார் இறந்துவிடுகிறார். ஆளவந்தாரை கொன்றது யார்? கொன்றவர்களை முத்தழகு என்ன செய்தான்? போன்ற கேள்விகளுக்கு விடைகாணுதலே மீதிக் கதையாகும்.

Remove ads

இசை

இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆவார்.

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், பாடல் ...

விமர்சனம்

"சரத் குமாரும் இயக்குநர் சுரேஷும் அரசியலை கதைக்களமாகக் கொண்டு காதாநாயகனை மிகவும் வீரமுள்ளவனாக காட்டினர்"[2] என்றும், "நம் நாடு ஓர் அரசியல் படம் என்றும், நேரத்தை கழிக்கப் பார்க்கலாம்" [3] என்றும் விமர்சனம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads