நயாப் சிங்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

நயாப் சிங் சைனி (Nayab Singh Saini) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய சனதா கட்சியின் மக்களவை உறுப்பினரான இவர் அரியானா மாநிலத்தின் குருசேத்ரா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

விரைவான உண்மைகள் நயாப் சிங்கு சைனிNayab Singh Saini, இந்திய மக்களவை உறுப்பினர் ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

நயாப் சிங் சைனி 1970 ஆம் ஆண்டு சனவரி மாதம் 25 ஆம் தேதியன்று அம்பாலாவில் உள்ள மிசாபூர் மச்ரா என்ற சிறிய கிராமத்தில் ஒரு சைனி குடும்பத்தில் பிறந்தார். [1] [2][3] முசாபர்பூரில் உள்ள பி.ஆர். அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்திலும், மீரட்டில் உள்ள சரண் சிங் பல்கலைக்கழகத்திலும் படித்து சட்டப்பாடத்தில் பட்டங்களைப் பெற்றார்.[4]

தொடக்கத்தில் நயாப் சிங்கு வலதுசாரி இந்து அமைப்பான இராசுட்ரிய சுயம் சேவாக்கு சங்கத்தில் சேர்ந்தார். இதன் மூலம் மனோகர் லால் கட்டாரை சந்தித்து ஈர்க்கப்பட்டார். சிறிது காலத்திற்குப் பிறகு இவர் பாரதீய சனதா கட்சியில் சேர்ந்தார். அதன் பிறகு அம்பாலா நகரத்தில் தலைவர் உட்பட பல உள்ளூர் கட்சி அலுவலகங்களை நடத்தினார். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்கு வங்கியாகவும், நீண்ட காலமாக கட்சிக்கு விசுவாசமாகவும் இருந்து வருகிறார்.[5]

Remove ads

அரசியல் வாழ்க்கை

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நரைங்கர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் எதிர்த்துப் போட்டியிட்ட ராம்கிசன் குர்சரால் தோற்கடிக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 24,361 வாக்குகள் வித்தியாசத்தில் நயாப் சிங் சைனி வெற்றி பெற்றார். அரியானா அரசின் மாநில அமைச்சராக இருந்தார். இப்போது அவர் குருசேத்திரத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[6]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads