நரசிம்மன் ராம்
இந்திய இதழியலாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நரசிம்மன் ராம், என். ராம் என்றும் அறியப்படுபவர், (பிறப்பு மே 4, 1945) ஓர் இந்திய இதழியலாளர். த இந்து ஆங்கில நாளிதழின் முதன்மை ஆசிரியராக சூன் 27,2003 முதல் இருந்து வருகிறார். இந்து குழுமத்தின் பிற வெளியீடுகளான பிரண்ட்லைன், த இந்து பிசினஸ்லைன், ஸ்போர்ட்ஸ்டார் இதழ்களையும் நிர்வகித்து வருகிறார். இந்திய அரசு அவருக்கு பத்ம பூசண் விருது வழங்கியுள்ளது. அவரது இடதுசாரி நோக்குகளுக்காகவும்[2][3] தமிழீழத்திற்கு எதிரான நிலை குறித்தும்[4] பெரிதும் விமரிசிக்கப்படுபவர்.இலங்கை அரசு அவருக்கு லங்காரத்னா என்ற உயரிய குடிமை விருது வழங்கியுள்ளது.
Remove ads
கல்வி
ராம் சென்னை, லயோலாக் கல்லூரியில் 1964ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். 1966ஆம் ஆண்டு முதுகலைப்பட்டத்தை மாநிலக் கல்லூரியில் பெற்றார். பின்னர் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தின் இதழியல் பட்டமேற்படிப்புப் பள்ளியில் ஒப்பீடு இதழியலில் எம். எஸ் பட்டம் பெற்றார்.[5] மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார்.1970ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் இந்திய பொதுவுடமைக் கட்சியுடன் தொடர்புடைய மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டிணைப்பு(SFI) உருவானபோது அதன் துணைத்தலைவராக இருந்தார்.[6]
Remove ads
தனி வாழ்க்கை
இவரது முதல் மனைவி சூசன் ஆங்கிலப் பெண்மணி. இவர்களது மகள் வித்யா ராம் புலிட்சர் பரிசு பெற்றவர். முதல் மனைவியுடனான விவாகரத்திற்குப் பின்னர் ராம், மரியம் சாண்டி என்பவரை மணந்தார்.
இதழியல் பணிவாழ்வு
1977ஆம் ஆண்டு தமது குடும்ப நிறுவனமான இந்து குழுமத்தில் த இந்து நாளேட்டின் இணை தொகுப்பாசிரியராக தமது பணிவாழ்வைத் தொடங்கினார். 1980ஆம் ஆண்டு வாசிங்டன் செய்தியாளராகப் பணியாற்றினார். 1984ஆம் ஆண்டு பிரண்ட்லைன் வார இதழ் துவங்கப்பட்டப்போதிலிருந்து அதனுடன் இணைந்துள்ளார்.[5]. ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் போபர்ஸ் அவதூற்றை வெளிக்கொணர்ந்ததற்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads