நரம்புக் கருவி

From Wikipedia, the free encyclopedia

நரம்புக் கருவி
Remove ads

நரம்புக்கருவிகள் என்பது ஒரு கலைஞர் இசைக்கும்போது அல்லது ஏதேனும் ஒரு வகையில் சரங்கள் அல்லது நரம்புகள் அதிர்வுறும் பொது ஒலியை உருவாக்கும் இசைக்கருவிகளாகும். இசைக்கலைஞர்கள் சில இசைக்கருவிகளை தங்கள் விரல்களால் அல்லது ஒரு கருவி துணை கொண்டு சரங்களைப் பறிப்பதன் மூலமும், லேசான மர சுத்தியலால் சரங்களை அடிப்பதன் மூலமும் அல்லது வில் மூலம் சரங்களைத் தேய்ப்பதன் மூலமும் இசைக்கிறார்கள். சில விசைப்பலகை கருவிகளில், இசைக்கலைஞர் சரத்தைப் பறிக்கும் விசையை அழுத்துகிறார். மற்ற இசைக்கருவிகள் சரத்தைத் தாக்குவதன் மூலம் ஒலியை உருவாக்குகின்றன.

Thumb
நரம்புக்கருவிகள்
Remove ads

வகைகள்

நரம்புக்கருவிகள் நான்கு வகைப்படும்:[1][2]

  • குழாய் உடன் இணைக்கப்பட்ட இசை வில் கொண்டவை
  • முகப்பு மற்றும் ஒலிபலகையை இணைக்கும் குறுக்குப்பட்டை மூலமாக சரங்களைக் இயக்கப்படுபவை
  • இரண்டு கைகளைக் கொண்டு, அவைகளை இணைக்கும் குறுக்குப்பட்டை மற்றும் ஒலிப்பலகை இடையில் சரங்களைக் கொண்டவை
  • ஒலிப்பலகைக்கு செங்குத்தாக சரங்களைக் கொண்டவை

நுட்பங்கள்

அனைத்து நரம்பு இசைக்கருவிகளும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதிர்வு சரங்களில் இருந்து ஒலியை உருவாக்குகின்றன. அவை கருவியின் உடலால் காற்றிற்கு மாற்றப்படுகின்றன (மின்னணு முறையில் பெருக்கப்பட்ட கருவிகளை தவிர) . அவை பொதுவாக சரங்களை அதிர்வடையச் செய்யப் பயன்படுத்தப்படும் நுட்பத்தால் வகைப்படுத்தப்படுகின்றன (அல்லது முதன்மையான நுட்பத்தை பொறுத்து, ஒன்றுக்கு மேற்பட்ட நுட்பங்களை பயன்படுத்தினால்). மூன்று பொதுவான நுட்பங்கள்: பறித்தல், தேய்த்தல் மற்றும் தாக்குதல். தேய்த்தல் மற்றும் பறித்தல் இடையே உள்ள ஒரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், தேய்த்தல் நிகழ்வுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இருக்கும்.[3]

  • பறித்தல் என்பது வீணை போன்ற கருவிகளில் வாசிக்கும் முறையாகும். ஒரு விரல் பெரும்பாலும் கட்டைவிரல் அல்லது இறகுகளை (இப்போது பிளாஸ்டிக் கூட பயன்படுத்தப்படுகிறது) பயன்படுத்தி சரங்களைப் பறிக்கலாம்.
  • தேய்த்தால் வயலின் போன்ற இசை கருவிகளில் பயன்படுகிறது. வில் போன்று அதன் முனைகளுக்கு இடையில் நீட்டப்பட்ட ஒரு ஈரப்பசை தடவிய முடிகள் அல்லது நார்களை, ஒரு பட்டை ரிப்பன் கொண்ட ஒரு குச்சியைக் கொண்டு தேய்க்கப்படுகிறது. ஒரு சரத்தின் குறுக்கே தேய்ப்பதால், அதிர்வு உண்டாக்குகிறது, மேலும் கருவியை ஒலியை வெளியிட தூண்டுகிறது.[4]
  • சரம் கொண்ட கருவிகளில் ஒலி உற்பத்தியின் மூன்றாவது பொதுவான முறை சரத்தை அடிப்பதாகும். பியானோ போன்ற கருவிகள் இந்த ஒலி உற்பத்தி முறையைப் பயன்படுத்துகின்றன. சரங்களைத் தாக்கினாலும், மிகவும் கடினமான சுத்தியல் சரங்களைத் தாக்கும்போது ஏற்படும் கூர்மையான தாக்குதலுக்கு மாறாக, உருவாகும் ஒலி மெல்லியதாக இருக்கும்.

மேலும் சில கருவிகளில் காற்றின் இயக்கத்தால் சரங்கள் மீட்டப்படுகின்றன. சரங்களைக் கொண்ட சில கருவிகள் இணைக்கப்பட்ட விசைப்பலகையை அழுத்துவதன் மூலம் இசைக்கப்படுகின்றன.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads