நரேந்திர தபோல்கர்

From Wikipedia, the free encyclopedia

நரேந்திர தபோல்கர்
Remove ads

நரேந்திர தபோல்கர் (ஆங்கிலம்: Narendra Dabholkar; 1 நவம்பர் 1945 - 20 ஆகத்து 2013) ஒர் இந்திய பகுத்தறிவாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர், மருத்துவர் ஆவார். இவர் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகளுக்கான பெரிதும் அறியப்படுகின்றார். இவர் 20 ஆகத்து 2013 அன்று சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

விரைவான உண்மைகள் Narendra Dabholkar, தாய்மொழியில் பெயர் ...
Remove ads

தொடக்க வாழ்க்கை

நரேந்திர தபோல்கர் பத்து சகோதரகளில் கடைசி ஆவார். இவர்களில் மூத்தவர் கல்வியாளர், காந்தியவாதி, சமவுடமைவாதி தேவடாரா தபோல்கர் ஆவார். இவர் மருத்துவக் கல்வியை மிராசு மருத்துவக் கல்லூரியில் பெற்று மருத்துவரானார்.

சமூக செயற்பாடுகள்

இவர் மருத்துவராக பத்தாண்டுகள் பணி செய்ந்தார். அதன் பின் 1980 களில் இவர் சமூக நீதி தொடர்பாக இயக்கங்களில் பங்கெடுத்தார்.

காலப் போக்கில், இவர் மூட நம்பிக்கைகள் எதிர்க்கும் பணிகளில் செயற்படத் தொடங்கினார். 1989 இல் இவர் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்கான மகாராட்டிர செயற்குழு என்ற அமைப்பை நிறுவி, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டார். பல சாமிமார்களையும் தந்திரக் காரர்களை இவர் எதிர்த்தார். இவர் புனர்வாழ்வு அமைப்பான Parivartan அமைப்பு உறுப்பினர்களில் ஒருவரும் ஆவார். இவர் மாராத்தி கிழமை இதழான Sadhana வின் ஆசிரியரும் ஆவார்.

Remove ads

படுகொலை

20 ஆகத்து 2013 அன்று, தபோல்கர் தனது காலை நடைப் பயிற்சிக்காக வெளியே சென்று இருந்தார். அப்பொழுது அடையாளப்படுத்தப்படாத இருவரால் ஓம்காரேஸவர் கோயில் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை நான்கு தடவைகள் மிக அருகாக சுட்டுள்ளார்கள். சுட்டவர்கள் அருகே தரித்திருந்த ஈருளியை பயன்படுத்தி தப்பிச் சென்றுள்ளார்கள். இரண்டு தோட்டாக்கள் தலையிலும், இரண்டு மார்பிலும் தாக்கி உள்ளன.[2]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads