நரேந்திர மோடி விளையாட்டரங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நரேந்திர மோடி விளையாட்டரங்கம் (குசராத்தி: નરેન્દ્ર મોદી સ્ટેડિયમ), அகமதாபாத் நகரத்தில் சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டரங்க வளாகத்தில் உள்ள துடுப்பாட்ட அரங்கம் ஆகும். முன்னர் மொதெரா விளையாட்டரங்கம் என்று அழைக்கப்பட்ட நரேந்திர மோதி விளையாட்டரங்கம், இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மாநகராட்சியின் மொதெரா பகுதியில் உள்ளது. ஆத்திரேலியா புல்லைக் கொண்டு, முட்டை வடிவத்தில் 63 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த விளையாட்டரங்கம், 1,10,000 பார்வையாளர்கள் அமர்ந்து காணக்கூடிய வகையில் 2020-இல் கட்டி முடிக்கப்பட்டது.[7] இந்த விளையாட்டரங்கத்தின் உரிமையாளர்கள் குஜராத் துடுப்பாட்டச் சங்கம் ஆகும். 24 பிப்ரவரி 2021 அன்று இப்புதிய விளையாட்டரங்கத்திற்கு, நரேந்திர மோடி விளையாட்டரங்கம் எனும் பெயரிட்டு, இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் 24 பிப்ரவரி 2021 அன்று அலுவல்முறையில் திறந்து வைத்தார். இது ஒரு இலட்சத்திற்கும் மேல் பார்வையாளர்கள் அமரும் வகையில் கட்டப்பட்ட உலகின் பெரிய விளையாட்டரங்கம் ஆகும்.[8][9][10] [11]
Remove ads
வரலாறு
முதன் முதலில் இந்த விளையாட்டரங்கம் 1983-இல் கட்டப்பட்டு, 2006-இல் சீரமைக்கப்பட்டது.[12]2015-இல் இந்த விளையாட்டரங்கை முழுவதும் இடித்து பன்னாட்டுத் தரத்தில் பெரிதாக கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. பிப்ரவரி 2020-இல் 63 ஏக்கர் பரப்பளவில், 1,10,000 பேர் அமரும் வகையில் ரூபாய் 800 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட புதிய விளையாட்டரங்கம் நரேந்திர மோடி விளையாட்டரங்கம் எனப் பெயரிடப்பட்டு, 24 பிப்ரவரி, 2021 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர். ராம் நாத் கோவிந்தால் திறந்து வைக்கப்பட்டது.[13][14][15]
Remove ads
முக்கிய நிகழ்வுகள்
உலக கிரிக்கெட் போட்டிகள்
பழைய விளையாட்டரங்கத்தில் ஒரு நாள் உலக துடுப்பாட்டப் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அவைகள் வருமாறு;
புதிய விளையாட்டரங்கத்தில் இந்தியா - இங்கிலாந்து துடுப்பாட்டப் போட்டிகள், 2021
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் துடுப்பாட்ட வீரர்கள் கலந்து கொள்ளும் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் இருபது20 போட்டிகள், இப்புதிய விளையாட்டரங்கத்தில் 24 பிப்ரவரி 2021 முதல் 28 மார்ச் 2021 முடிய நடைபெறுகிறது.[16]
நமஸ்தே டிரம்ப்
ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் டோனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு வருகை தந்த போது, நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி இந்த புதிய விளையாட்டரங்கத்தில் 24 பிப்ரவரி 2020 அன்று நடைபெற்றது.[17][18]
Remove ads
படக்காட்சிகள்
- அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் 24 பிப்ரவரி 2020 அன்று இந்திய வருகையின் போது, சர்தார் படேல் விளையாட்டரங்கத்தில் நரேந்திர மோடியுடன்
- பழைய விளையாட்டரங்கம்
- அதானி அமர்வுப் பகுதி, பழைய விளையாட்டரங்கம்
- விளையாட்டரங்த்தின் நுழைவாயில் இரும்பு எருது சிற்பம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads