நவகண்ட யோகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நவகண்ட யோகம் என்பது தன்னுடைய உடலின் ஒன்பது பாகங்களை துண்டு துண்டாக மாற்றி சிவபெருமானை நோக்கி தவம் செய்வதாகும். [1] இந்த சித்து கலையை பல்வேறு சித்தர்கள் கற்று கடைபிடித்து வந்துள்ளார்கள்.
பாடகச்சேரி ராமலிங்க சாமிகள் சிறுவயது முதலே இந்த சித்து கலையில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்.[1] ஒரு முறை ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது இந்த சித்தை செய்துள்ளார். அப்போது அங்குவந்தவர்கள் இவரை யாரோ வெட்டிப் போட்டுவிட்டார்கள் என பயந்துள்ளார்கள். பின்பு வீட்டிற்கு ஆடுகளோடு திரும்பி வந்துள்ளார். அதுபோல இவரை சில அடியாட்கள் கொடுமை செய்ய வரும் போது, நவகண்ட யோகத்தில் இவர் இருப்பதைக் கண்டு பதறி ஓடியுள்ளனர். [1]
திருவொற்றியூர் வீரராகவ சுவாமிகள் நிர்வாணமாக இருப்பவர். இவருடைய நிர்வாணத்தினை புரிந்து கொள்ளாத காவலர்கள் சிலர் சிறையில் அடைத்துள்ளனர். அப்போது வீரராகவ சுவாமிகள் நவகண்ட யோகத்தில் இருந்தார். உடல் பாகங்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அச்சமுற்ற காவலர்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். ஆனால் வீரராக சுவாமிகள் உயர் அதிகாரிகள் முன்பு முழு உடலோடு தன்னை வெளிப்படுத்த, வீரராக சுவாமிகளின் பெருமையை உணர்ந்தனர். [2]
Remove ads
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads