நவரத்தினம் கேசவராஜன்

ஈழத்துத் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆவார் From Wikipedia, the free encyclopedia

Remove ads

நவரத்தினம் கேசவராஜன் (19 அக்டோபர் 1962 – 9 சனவரி 2021) ஈழத்துத் தமிழ்த் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் ஆவார். அது மட்டுமல்லாது இவர் விவரணத் தயாரிப்பு, கதாசிரியர், நடிகர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகத்திறமை கொண்டவர். 1986-ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சியுடன் இணைந்து பல குறும்படங்களையும், முழுநீளத் திரைப்படங்களையும் இயக்கினார். ஈழப்போர்க் காலத்தில் அப்பகுதிகளில் உள்ள இளம் திரைப்படத் தயாரிப்பாளர்களை திரைப்படத் துறைசார்ந்து வளர்த்துவிட்டவர். பிஞ்சுமனம், திசைகள் வெளிக்கும், கடலோரக் காற்று, அம்மா நலமா, பனைமரக் காடு எனப்பல முழுநீளத் திரைப்படங்களையும், அப்பா வருவார் போன்ற பல குறும்படங்களையும் உருவாக்கியுள்ளார்.[1] சிங்களத் திரைப்படத்துறையிலும் ஆர்வமுள்ள ஒரு படைப்பாளராக, வடக்கையும் தெற்கையும் இணைத்த ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் என்றும் அறியப்பட்டவர்.[2] பிரசன்னா விதானகே, அசோகா அந்தகம, விமுக்தி ஜெயசுந்தரா ஆகியோர் இயக்கிய மூன்று பாகத் திரைப்படத்தில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார்.[2]

விரைவான உண்மைகள் நவரத்தினம் கேசவராஜன், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் வடக்கே அரியாலையில் பிறந்த இவர், தனது இறுதிப் பகுதியில் மானிப்பாய், சுதுமலையில் வசித்து வந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படிக்கும் போதே நாடகம், திரைப்படத் துறையில் ஆர்வம் கொண்டிருந்தார்.[1] பல வீதி, மேடை நாடகங்களைத் தயாரித்து வழங்கினார்.[1] 1986-இல் “தாயகமே தாகம்”, “மரணம் வாழ்வின் முடிவல்ல” போன்ற படங்களை இயக்கியுள்ளார். இலங்கையில் விடுதலைப் போராட்டம் வலுப் பெற்றிருந்த நாட்களில் விடுதலைப் புலிகளின் நிதர்சனம் என்ற காட்சியூடகத்தின் மூலம் சினிமா முயற்சிகளைத் தொடங்கி, “அம்மா நலமா” மற்றும் “கடலோரக் காற்று” என்ற இரண்டு படங்களையும் பல குறும் படங்களையும் உருவாக்கியவர். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் வலியை உணர்த்தும் “அப்பா வருவார்” என்ற குறும்படத்தை இயக்கினார். பனைமரக்காடு போன்ற திரைப்படங்கள் மூலம் போருக்குப் பின்னரான சூழலில் மக்களின் வாழ்க்கையை உலகறியச் செய்தார்.[1]

Remove ads

பங்களித்த திரைப்படங்கள்

  • தாயகமே தாகம்
  • மரணம் வாழ்வின் முடிவல்ல
  • பிஞ்சுமனம்
  • திசைகள் வெளிக்கும்
  • கடலோரக் காற்று
  • அம்மா நலமா
  • பனைமரக் காடு
  • அப்பா வருவார் (குறும் படம்)
  • வெடி மணியமும் இடியன் துவக்கும் (குறும்படம்)

மறைவு

இறுதிக் காலத்தில் புற்றுநோயால் பீடிக்கப்பட்ட இவர் 2021 சனவரி 9 அன்று யாழ்ப்பாணத்தில் தனது 58-வது அகவையில் மாரடைப்பால் காலமானார்.[1][2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads