நவாப்ஷா மாவட்டம்

பாக்கித்தானின் ஒரு மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

நவாப்ஷா மாவட்டம்map
Remove ads

நவாப்ஷா மாவட்டம் (Shaheed Benazirabad District (சிந்தி ضلعو بينظير آباد ), (தற்போதைய பெயர் சாகித் பெனாசீராபாத் மாவட்டம்[2]), பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இதன் தலைமையிட நகரம் நவாப்ஷா நகரம் ஆகும். இம்மாவட்டத்தில் சன்குதரோ (Chanhudaro) எனுமிடத்தில் சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களம் உள்ளது.

விரைவான உண்மைகள் நவாப்ஷா மாவட்டம், நாடு ...
Remove ads

மாவட்ட வரலாறு

1912-இல் நிறுவப்பட்ட இம்மாவட்டத்தில் 7 வருவாய் வட்டங்கள் கொண்டிருந்தது. அவைகள்:

  1. கண்டியாரோ
  2. நௌசெரா பெரோஸ்
  3. மோரோ
  4. சக்ரந்து
  5. நவாப்ஷா
  6. சிஞ்ச்ரோ
  7. சாதாத்பூர்

1953-இல் சாதாத்பூர் மற்றும் சிஞ்ச்ரோ வருவாய் வட்டங்களை புதிதாக நிறுவப்பட்ட சங்கர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. 1989-இல் நௌசெரா பெரோஸ் மற்றும் கண்டியாரோ வட்டங்கள் மற்றும் மொரோ வருவாய் வட்டத்தின் பாதியைக் கொண்டு நௌசரோ பெரோஸ் மாவட்டம் நிறுவப்பட்டது.[3]

Remove ads

மாவட்ட நிர்வாகம்

தற்போது நவாப்ஷா மாவட்டம் 4 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. அவைகள்:

  • சக்கரந்து
  • நவாப்ஷா
  • காஜி அகமது
  • தௌர்

மக்கள்தொகை பரம்பல்

2017-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 4502 சகிமீ பரப்பளவு கொண்ட நவாப்ஷா மாவட்ட மொத்த மக்கள்தொகை 16,12,847 ஆகும்.[1] மக்கள்தொகையில் இசுலாமியர்கள் 96.3% மற்றும் இந்துக்கள் 2.77% ஆகவுள்ளனர். சிந்தி மொழி 79.25%, உருது 8.72%, பஞ்சாபி மொழி 7.90%, சராய்கி மொழி 1.82% மக்களும் பேசுகின்றனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூல்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads