நவீனமயமாதல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சமூக அறிவியலில், நவீனமயமாதல் (Modernization theory) என்பது, தனி மனிதர்களின் வாழ்க்கையை முற்றாகவே மாற்றியமைக்கும், தொழில்மயமாதல், நகராக்கம் மற்றும் பிற சமூக மாற்றங்கள் சார்ந்த ஒரு நடைமுறையைக் குறிக்கும் ஒரு கருத்துரு ஆகும். இதன் பொருள் குறித்தான விவாதம் கல்வியாளார்களிடையே பரவலாக உள்ளது.[1][2][3][4]


நவீனமயமாதல் என்னும் கருத்துரு, சமூகப் படிமுறை வளர்ச்சிக் கோட்பாடுகள் விளக்குகின்றபடி சமூகங்கள் ஒரு பொதுவான வளர்ச்சிப்போக்குக் கொண்டவை என்ற நோக்கிலிருந்து உருவானதாகும். இதன்படி, ஒவ்வொரு சமூகமும் காட்டுமிராண்டி நிலையிலிருந்து உயர் மட்டங்களிலான மேம்பாட்டையும், நாகரிகத்தையும் நோக்கி படிமுறை வளர்ச்சி அடைகின்றன கூடிய நவீனமயமான நாடுகள் அதிக செல்வம் உடையனவாகவும், பலம் கொண்டவையாகவும் இருப்பதுடன், அவற்றின் குடிமக்கள் அதிக சுதந்திரம் உடையவர்களாகவும், உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். இதுவே சமூக அறிவியல் துறையில் பல பத்தாண்டுகளாக நிலவிவரும் பொதுவான கருத்தாகும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads