நாகாலாந்தின் இசை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகாலாந்து மாநிலத்தின் இசை, நாகாலாந்து பழங்குடியினரின் நாட்டுப்புறப் பாடல்களாலும், பாரம்பரிய இசைக் கருவிகளாலும் அமைந்தது
நாட்டுப்புற இசை
நாட்டுப்புறக் கதைகளும் பாடல்களும் தலைமுறைகள் தாண்டி நிலைக்கிறது. உழவுக் காலத்திற்கேற்ப தனித்துவமான பாடல்களும் உண்டு.[1] பல பாடல்கள் முன்னோர்களை நினைவுகூர்ந்தும், வீரர்களை புகழ்ந்தும் பாடப்படுகின்றன. பழங்கால காதல் கதைகளும் பாடல் வடிவம் பெற்றிருக்கின்றன.[2]
இசைக் கருவிகள்
மேளம், மூங்கில்கள் செய்த புல்லாங்குழல், வயலின் உள்ளிட்ட கருவிகளை இயக்கி, இசையமைக்கின்றனர்.[3]
நடனம்
பெரும்பாலான நடனங்களில் மக்கள் குழுக்களாய் இணைந்து ஆடுகின்றனர். சிலியாங் இனத்தில் ஆண்கள் மட்டும் நடனமாடும் வழக்கம் உள்ளது. மற்ற இனத்தவர் அனைவரும், ஆண்கள், பெண்களுடன் இணைந்தே ஆடுகின்றனர். நடனங்களில் கைத்தட்டுவதும், ஒலியெழுப்புவதும் முக்கியத்துவம் பெறுகின்றனர். வண்ணம் மிக்க ஆடைகளை அணிந்து நடனமாடுவர்.[4]
இசைப் பாடம்
நாகாலாந்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பாரம்பரிய இசையும் ஒரு பாடமாக நடத்தப்படுகிறது. [5]
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads