நாகை ஸ்ரீராம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாகை ஸ்ரீராம் (19 சூன் 1980 – 8 ஏப்ரல் 2022) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக வயலின் இசைக் கலைஞர் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
நாகை சிறீராம் 1980 சூன் 19 இல் சென்னையில் பிறந்தார். இவர் தனது ஆரம்பகால வயலின் இசைப் பயிற்சியை தனது பாட்டி ஆர். கோமளவல்லியிடமிருந்து தனது 10 ஆவது வயதில் பெற ஆரம்பித்தார். தொடர்ந்து அவரது மாமா கலைமாமணி நாகை முரளிதரனிடம் மேலதிக பயிற்சியைப் பெற்றார்.[1] அகில இந்திய வானொலி, இவரை தனது நிலையத்து முதல்-தரக் கலைஞராக அங்கீகரித்தது. தூர்தர்சன் தொலைக்காட்சியும் இவரை உயர்வுநிலைக்கு அங்கீகாரம் செய்தது.[2]
நாகை ஸ்ரீராம் தனது 12 ஆவது வயதில் ஒரு வயலின் கலைஞராகத் தனது இசைப் பயணத்தை புதுடில்லியில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் நெய்வேலி சந்தானகோபாலனுக்கு பக்கவாத்தியமாக அவர் வயலின் வாசித்தார். அன்றில் இருந்து, முன்னணி கருநாடக இசைப் பாடகர்களான எம். பாலமுரளிகிருஷ்ணா,[1] பி. உன்னிகிருஷ்ணன், டி. என். சேசகோபாலன்,[3] தி. வே. சங்கரநாராயணன்,[4] ஓ. எஸ். தியாகராஜன், கே. வி. நாராயணசுவாமி, எஸ். சௌம்யா,[2] ஹைதராபாத் சகோதரர்கள், என். ரமணி, சஞ்சய் சுப்ரமணியன், டி. எம். கிருஷ்ணா, கர்நாட்டிகா சகோதரர்கள் ஆகியோருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்து வந்தார்.[5]
Remove ads
விருதுகள்
- யுவ புராஸ்கர், 2014
- சண்முகா சங்கீத சிரோன்மணி, சண்முகநாத சபா, மும்பை, 2007
- சிறந்த வயலின் கலைஞர் - மியூசிக் அகாதெமி (சென்னை) - 2001 முதல் 2008 வரை (தொடர்ந்து 8 ஆண்டுகள்)
- சிறந்த வயலின் கலைஞர் - மகாராசபுரம் விசுவநாத ஐயர் அறக்கட்டளை - 2004
- யுவகலாபாரதி – பாரத் கலாச்சாரம், சென்னை - 2003[1]
மறைவு
நாகை சிறீராம் 2022 ஏப்ரல் 8 இல் தனது 41-வது அகவையில் காலமானார்.[6]
2018 சர்ச்சை
2018 இல் #மீட்டூ இயக்க காலத்தில் சென்னை இசைக் கழகம் சிறீராமையும், மேலும் ஆறு முன்னணிக் கலைஞர்களையும் இடைநிறுத்தியிருந்தது.[7]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads