நாக பஞ்சமி

From Wikipedia, the free encyclopedia

நாக பஞ்சமி
Remove ads

நாக பஞ்சமி (தேவநாகரி:नाग पंचमी) என்பது இந்து வழிபாட்டு முறையில் ஒரு பிரிவான நாக வழிபாட்டில் போற்றுதற்குரிய நாளாகும். இந்நாளில் நாக தோசம் நீங்கவும், தங்களின் சந்ததிகளுக்கு அந்தத் தோசம் பாதிக்காமல் இருக்கவும் நாக வழிபாடு செய்கின்றார்கள். ஆவணி மாதத்தில் வருகின்ற பஞ்சமி திதியை நாகப் பஞ்சமி என்று அழைக்கின்றனர். [1] [2]

Thumb
நாக பஞ்சமி வழிபாடு, ராமேஸ்வரம்

ஒரு பெண் பாம்பினால் இறந்த தன் அண்ணன்களை இறை அருளாலால் உயிர் பெற வைத்த நாள் என்பதால் இந்நாளில் பூசை செய்தால், கணவனுக்கும், சகோதரர்களுக்கும் ஆயுள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

Remove ads

தொன்மம்

Thumb
நாகர்களுக்கு கல்லால் உருவம் அமைத்து செய்யப்படும் வழிபாடு குறித்தான ஓவியம்

ஒரு கிராமத்தில் ஒரு பெண் தன்னுடைய ஏழு அண்ணன்மார்களுடன் வசித்துவந்தாள். வயல் வேலை செய்யும் அவர்களுக்கு உணவு எடுத்துச் செல்லுதல் இவள் வழக்கம். அவ்வாறு செல்லும் போது ,ஒரு நாள் கருடனொன்று பாம்பினைக் கால்களால் பிடித்துத் தூக்கிக் கொண்டு போனது. அந்தக் கழுகு பாம்பினை இறுகப்பிடித்திருந்ததால், அதிக வலியில் பாம்பு விசத்தினைக் கக்கியது. அவ்விசம் தங்கை எடுத்துச் செல்லும் உணவுப் பொருளில் விழுந்தது. அதை உண்ட ஏழு அண்ணன்மார்களும் இறந்தார்கள். அவள் அப்பா அம்மா என்று அழைத்ததும், அங்கு வந்த சிவபெருமான் பார்வதி தம்பதியினர், நடந்ததை விளக்கி நாகப் பஞ்சமி விருதத்தினை இருக்கும்படி கோரினார்கள். அந்தப் பெண்ணும் விரதமிருந்து ஏழு அண்ணன்களையும் உயிர்பிக்கக் காரணமாக இருந்தாள். [3]

Remove ads

நாகபஞ்சமி கதை

ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றான நாககுமார காவியம் என்பதை நாகபஞ்சமி கதை என்று அழைக்கின்றனர். [4] இந்த நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூல் ஐந்து சருக்கங்களையும், 170 பாடல்களையும் கொண்டதாகும்.

இதனையும் காண்க

மேற்கோள்களும் குறிப்புகளும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads