நாங்க ரொம்ப பிசி

From Wikipedia, the free encyclopedia

நாங்க ரொம்ப பிசி
Remove ads

நாங்க ரொம்ப பிசி (Naanga romba busy) என்பது 2020 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி குற்றவியல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பத்ரி இயக்கியுள்ளார். இந்த படம் கன்னட திரைப்படமான மாயபஜார் 2016 (2020) இன் மறு ஆக்கம் ஆகும், மேலும் இத்திரைப்படத்தில் பிரசன்னா, ஷாம், அஸ்வின் ககுமனு, யோகி பாபு, ஸ்ருதி மராத்தே, ரித்திகா சென், மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர்நடித்துள்ளனர் .

விரைவான உண்மைகள் நாங்க ரொம்ப பிசி, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

தயாரிப்பு

2020 செப்டம்பர் மாத தொடக்கத்தில், சுந்தர் சி., பணமதிப்பு நீக்கம் தொடர்பான த்ரில்லர் படமான மாயாபஜார் 2016 (2020) இன் மறுஆக்க உரிமையை வாங்கியதாக செய்தி வெளியிடப்பட்டது.[2][3] இத்திரைப்படத்தின் பணிகள் செப்டம்பர் 14, 2020 அன்று தொடங்கப்பட்டது.[4] அவ்னி மூவிஸ் என்ற பதாகையின் கீழ் இப்படம் தயாரிக்கப்பட்டது.[5] இப்படத்தை சுந்தர் சி உடன் கலகலப்பு (2012) மற்றும் ஆக்சன் (2019) படங்களில் வசன எழுத்தாளராக பணியாற்றிய பத்ரி இயக்கியுள்ளார்.[6][7] பிரசன்னா மற்றும் ஷாம் ஆகியோர் போலீஸ் அதிகாரிகளாகவும், அஸ்வின் ககுமனு மற்றும் யோகி பாபு முறையே ஒருவர் இளைஞராகவும், மற்றொருவர் திருடனாகவும் சித்தரிக்கப்பட ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[8] ரைசா வில்சன் படத்தில் பணியாற்ற இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன; இருப்பினும், இது பின்னர் தவறானது என்று நிரூபிக்கப்பட்டது.[9] குரு சிஷ்யன் (2010) படத்தில் நடித்த ஸ்ருதி மராத்தே, பிரசன்னாவுக்கு இணையராகப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இந்த படம் அவர் தமிழ் சினிமாவுக்கு திரும்ப வருவதைக் குறிக்கிறது.[10] கடைசியாக டகால்டியில் (2020) தோன்றிய ரித்திகா சென்,[11] ககுமனுக்கு இணையராகப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[1] கோவிட்-19 பெருந்தொற்றின் போது இந்த படம் இருபத்தி ஆறு நாட்களில் சென்னையில் படமாக்கப்பட்டது.[12][13] இத்திரைப்படத்தின் தலைப்பு பின்னர் நாங்க ரொம்ப பிசி என்று தெரியவந்தது.[14][15]

Remove ads

ஒலிப்பதிவு

சி.சத்யா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.[1]

வெளியீடு

இத்திரைப்படத்தின் முதல் காட்சி அக்டோபர் 26, 2020 அன்று காலை 11:30 மணிக்கு சன் டிவியில் திரையிடப்பட்டது.[6][16] படம் தீபாவளியன்று சன் டிவியில் வெளியாகும்.[14][17][18]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads