நாசகாரிக் கப்பல்

From Wikipedia, the free encyclopedia

நாசகாரிக் கப்பல்
Remove ads

நாசகாரிக் கப்பல் என்பது கடற்படைகளில் பயன்படுத்தப்படும் ஒரு வகையான போர்க்கப்பலாகும்.[1] இது பொதுவாக நீளமான அமைப்பைக் கொண்ட விரைவாக இயங்கக்கூடிய ஒரு வகை கப்பலாகும். இவை கடலில் பல நாட்கள் இயங்கி போர் புரியும் வல்லமை கொண்டவை. இவை ஒரு கடற்படை அல்லது போர்க் குழுவில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இவை பெரிய வானூர்தி தாங்கிக் கப்பல்களை பொதுவான அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு அதனுடன் பயணிக்கும்.

Thumb
இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஐஎன்எசு சென்னை நாசகாரிக் கப்பல்.

இக்கப்பல்கள் முதன் முதலில் 1885 ஆம் ஆண்டில் எசுப்பானிய கடற்படையால் எதிரி நாட்டுப் படகுகளுக்கு எதிரான பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டன.[2] 1904 ஆம் ஆண்டில் உருசிய-சப்பானிய போரின் போது, பெரிய, விரைவான மற்றும் சக்திவாய்ந்த ஆயுதங்களை கொண்ட நாசகாரிக் கப்பல்கள் பரவலாக மற்ற கப்பல்களை அழிக்க பயன்படுத்தப்பட்டன.[3] 1892 ஆம் ஆண்டு முதல் கடற்படைகளால் இவை படகு அழிப்பான் அல்லது அழிப்பான் என்று அழைக்கப்பட்டன. முதலாம் உலகப் போரின் போது நாசகாரிக் கப்பல்கள் என அனைத்துக் கடற்படைகளாலும் அழைக்கப்பட்டன.[4]

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு இந்தக் கப்பல்கள் இரகசிய கடல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட இலகுரக கப்பல்களாக இருந்தன. மேலும் பல கப்பல்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு குழுவாக இயங்கின. போருக்குப் பிறகு, இந்தக் கப்பல்களின் அளவு மற்றும் எடை வெகுவாக அதிகரித்தது. ஏவுகணைகளின் வருகை இந்த கப்பல்களின் அழிக்கும் சக்தியை பெருவாரியாக அதிகரித்தது. இதன் விளைவாக பெரிய மற்றும் அதிக சக்திவாய்ந்த ஏவுகணைகளைக் கொண்ட வலுவான நாசகாரிக் கப்பல்கள் கட்டப்பட்டன.[5][6]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads