நாசியழற்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாசியழற்சி (Rhinitis) அல்லது மூக்குச்சளி நோய் (coryza)[1] என்பது மூக்கிற்கு உள்ளேயுள்ள சீதமென்சவ்வு நமைச்சல் மற்றும் அழற்சியடைவதைக் குறிக்கிறது. நாசியழற்சியின் பொதுவான அறிகுறிகள்: மூக்கடைப்பு, மூக்கொழுகுதல், பின்புற மூக்கிலிருந்து சொட்டு சொட்டாக நீர் வடிதல் முதலியவையாகும்[2]. பொதுவாகக் காணப்படும் நாசியழற்சி ஒவ்வாமை நாசியழற்சியாகும்[3]. இது சாதாரணமாக காற்றிலுள்ள மகரந்தம், விலங்குகளின் தோல் செல்கள் (animal dander) போன்ற ஒவ்வாமையூக்கிகளால் தூண்டப்படுகிறது[4]. தும்மல், மூக்கு அரித்தல், இருமல், தலைவலி, அசதி, உடல்சோர்வு, புரிவுத் தடங்கல் (cognitive impairment) போன்றவை ஒவ்வாமை நாசியழற்சியின்போது உள்ள பிற அறிகுறிகளாகும்[5][6][7][8]. ஒவ்வாமையூக்கிகள் கண்களையும் பாதிக்கலாம். இதனால், கண்களிலிருந்து நீர் வடிதல், கண் சிவத்தல், அரிப்பெடுத்தல் மற்றும் கண்களைச் சுற்றி அதைப்பு ஆகியவை ஏற்படுகின்றன[5].
நாசியழற்சி சாதாரணமாகக் காணப்படும் ஒன்றாகும். ஒவ்வாமை நாசியழற்சி பிற நாடுகளுடன் ஒப்புநோக்கும்போது சில நாடுகளில் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் 10-30 சதவிகித பெரியவர்கள் நாசியழற்சியால் பாதிப்படைகிறார்கள்[9].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads