நாஞ்சிங் உடன்படிக்கை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாஞ்சிங் உடன்படிக்கை (Treaty of Nanjing) அல்லது நான்கிங் உடன்படிக்கை (Treaty of Nanking), என்பது 1842 ஆகஸ்ட் 29 ஆம் திகதி முதலாம் அபின் போரின் முடிவின் பின்னர் பிரித்தானியாவிற்கும் சிங் அரசவம்சப் பேரரசுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கையின் முதன்மை நோக்கம், சீனாவைப் பணியவைத்து, சீனாவிற்குள் அபினி போதைப்பொருள் வணிகச் சந்தையை திறப்பதாகும். அத்துடன் சீனாவுக்கு செலுத்தி வந்த சுங்கவரிகளைக் குறைப்பது உட்பட பலக்கோரிக்கைகளை பிரித்தானியா முன்வைத்தது.

இந்த உடன்படிக்கை முதலாம் அபின் போரில் சீனப்பேரரசு படுத்தோழ்வியடைந்த நிலையில் நடத்தப்பட்ட பேரம் பேசலாகவே அமைந்தது. இந்த உடன்படிக்கையின் படி, பிரித்தானியப் படையணிகளால் கைப்பற்றப்பட்ட ஹொங்கொங் தீவை முறைப்படி பிரித்தானியாவுக்கே ஒப்படைக்க சீனப்பேரரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டது.
Remove ads
வெளியிணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads