நாடோடிகள் கோபால்
இந்திய குணச்சித்திர நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாடோடிகள் கோபால் (Naadodigal Gopal) ஓர் குணச்சித்திர நடிகரும், நகைச்சுவை நடிகரும் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றினார்.
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் ஈரோட்டில் பணிபுரியும் பள்ளி ஆசிரியரான கவிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் (இரட்டையர்கள்) உள்ளனர்.
தொழில்
ஒரு விவசாயியான கோபால் நாடோடிகள் (2009) என்ற படத்தில் அனன்யாவின் தந்தையாக அறிமுகமானார்.[1][2] பின்னர் ராஜா மந்திரி (2016) கலையரசன், காளி வெங்கட் ஆகியோரின் தந்தையாக நடித்தார். நம்ம வீட்டு பிள்ளை (2019) படத்தில் சிவகார்த்திகேயனின் சாராய மாமாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது.[3] அதன்பிறகு இவர் பல படங்களில் நடித்துள்ளார். நாடோடிகள் 2 (2020) இவருடைய கடைசி படமாக இருந்தது.[1][2]
இறப்பு
கோபால் 5 பிப்ரவரி 2020 அன்று மாரடைப்பால் தனது 54 வயதில் இறந்தார்.[1][2]
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads