நாதம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாதம் என்பது இசைக்கு மிக முக்கியமானது என்பதுடன் இசைக்கு ஆதாரமானதும் ஆகும். காதிற்கு இனிமையைத் தரும் த்வனி, நாதம் என்று அழைக்கப்படும். நாதத்தினிலிருந்து சுருதிகளும், சுருதிகளிலிருந்து ஸ்வரங்களும், ஸ்வரங்களிலிருந்து இராகங்களும் உற்பத்தியாகின்றன.[1][2][3]
நாதத்தின் வகைகள்
நாதம் இரு வகைப்படும்.
- ஆகத நாதம்.
- அனாகத நாதம்.
ஆகத நாதம்
மனிதனுடைய முயற்சியால் உற்பத்தியாக்கப்படும் நாதம் ஆகத நாதம் ஆகும். நாம் கேட்கும் சங்கீதம், பாடும் சங்கீதம், வாத்தியங்களில் வாசிக்கப்படும் சங்கீதம் முதலியவைகள் எல்லாம் ஆகத நாதத்தைச் சேர்ந்தவையாகும்.
மேலும் இந்நாதம் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும்,
- ப்ராணி சம்பவ நாதம்
அதாவது உயிருள்ள தேகத்திலிருந்து உற்பத்தியாகும் நாதம். உ+ம் : வாய்ப்பாட்டு
- அப்ராணி சம்பவ நாதம்
அதாவது வஸ்துகளாகிய வீணை போன்ற தந்தி வாத்தியங்களினின்று உற்பத்தியாகும் நாதம்.
- உபய சம்பவ நாதம்
அதாவது உயிருள்ள பிராணிகளின் ஸஹாயத்தைக் கொண்டு மூங்கிலைப் போன்ற வஸ்துக்களில் உற்பத்தியாக்கப்படும் நாதம். கட்டைகளைக் கொண்டு செய்யப்பட்ட குழல், நாதசுவரம் போன்ற கருவிகளினின்று உண்டாக்கப்படும் நாதம் இதற்கு உதாரணமாகும்
அனாகத நாதம்
மனிதனுடைய முயற்சியின்றி இயற்கையிலேயே கேட்கப்படும் நாதம். இது யோகிகளாலும், சித்தர்களாலும் மட்டும் அறியக்கூடியது. தியாகராஜ சுவாமிகள் ஒரு சிறந்த நாத யோகியாக கருதப்படுகிறார். அனாகத நாதத்தை உணர்ந்து தனது அனுபவங்களை "ஸ்வர ராக ஸூதாரஸ" போன்ற கிருதிகளில் வெளியிட்டிருக்கின்றார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads