நாத்திகம் (இதழ்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாத்திகம் என்பது பி. இராமசாமி வெளியிட்ட தமிழ் இதழ் ஆகும். இறைமறுப்புக் கருத்துக்களையும், தி.மு.கவுக்கு எதிரான விமர்சனங்களையும் தாங்கி இந்த இதழ் நெடுங்காலம் வெளிவந்தது. இந்த இதழுக்கு எதிராக மு. கருணாநிதி, ம. கோ. இராமச்சந்திரன் உட்பட்டோர் 15 வழக்குகளையும், அரச சமய நிறுவனங்கள் 45 வழக்குகளையும் தொடுத்து ஆசிரியரை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கினர்.[1] இந்த வழக்குகளால் ஆசிரியர் சிறைத் தண்டனை, அபராதம் போன்ற தண்டனைகளை அனுபவித்தார்.
Remove ads
வரலாறு
நாத்திகம் என்ற பெயரிட்ட இதழைக் கொண்டுவருவதற்கு அண்ணாத்துரை எதிர்ப்புத் தெரிவித்தார். இந்த இதழ் வெளிவந்த போது, "நாத்திகம் மத எதிர்ப்புக் கொள்கை. அது தி.மு.க கொள்கையில்லை" என்று திமுக அறிவித்தது.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads