நானாஜி தேஷ்முக்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
நானாஜி தேஷ்முக் அல்லது சண்டிகடாஸ் அமித்ராவ் தேஷ்முக் (Chandikadas Amritrao Deshmukh Nanaji Deshmukh) (11 அக்டோபர் 1916–27 பிப்ரவரி 2010), இந்தியாவின், மகாராஷ்டிரம் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிறுவனர்களில் ஒருவர். இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் உறுப்பினராக இருந்தவர். 1999ஆம் ஆண்டில் பத்மவிபூசன் விருது பெற்றவர்.[1][2] 1937இல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் இணைந்து[3]ஆர் எஸ் எஸ் பிரச்சாரகராக உத்தரப்பிரதேசத்தில் சமூகப் பணியாற்றினார். 1950ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் மழலைப் பள்ளியான சரசுவதி மழலையர் பள்ளியை (சரஸ்வதி சிசு மந்திர்) கோராக்பூரில் துவக்கினார்.[4] [5]
ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் இராஷ்டிர தர்மம் , பாஞ்சஜன்யம் போன்ற மாத இதழ்களுக்கும், சுதேசி என்ற நாளிதழுக்கும் ஆசிரியராக செயல்பட்டவர்.
Remove ads
விருதுகள்
- பாரத ரத்னா (2019)[6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads