நான்காம் தமிழ் இணைய மாநாடு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இம்மாநாடு 2001 ஆம் ஆண்டு ஆகஸ்டு 23 24 25 ஆகிய தேதிகளில் மலேசியத் தலைநகா் கோலாலம்பூரில் உலக வா்த்தக மையத்தில் நடைபெற்றது. மாநாட்டின் துவக்கவிழாவில் மலேசிய பிரதமா் மகாதீர் முகமது அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மாநாட்டின் கருப்பொருள்

இம்மாநாட்டின் கருப்பொருளாக ‘வளர்ச்சிக்கான வழிகள்’ என்ற பொருண்மையில் கட்டுரைகள் அமையப்பெற்றன. மேலும் தமிழை மின் வணிக மொழியாக்குதல், ’NET For LIFE’ என்னும் கணிப்பொறிக் கல்வித்திட்டத்தை வகுத்தமைத்து பள்ளிக் குழந்தைகள் மழலையர், நடுவர், முதியோர் என மூன்று நிலைகளில் வழங்குதல் போன்ற பொருள்களிலும் கலந்தாய்வும் நடைபெற்றது.

மாநாட்டின் விவாதங்கள்

தற்போதைய தமிழ் எழுத்துருச் சிக்கல்கள் மொழி பெயா்ப்பிகள் தமிழ் ஒளி எழுத்துப் படிப்பான் ஆகியன முக்கிய விவாதங்களாக இம்மாநாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

தமிழ் மரபு அறக்கட்டளைத் தொடக்கம்

ஒளி எழுத்துப் படிப்பான் மூலமாக ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்து அவற்றைக் கணிப்பொறி மையமாக்கி இணையத்தில் தொகுக்க முனைவா் நா. கண்ணன் தலைமையில் அமைப்பு ஒன்று துவங்கப்பட்டது.தமிழ் மரபு அறக்கட்டளை என்ற இவ்வமைப்பிற்கு மலேசிய அமைச்சா் டத்தோ சாமி முதற்கட்ட நிதியாக பத்தாயிரம் டாலா்களை வழங்கி தமிழ் ஒலைச்சுவடிக்கு உயிர் கொடுத்தார். சா்வதேச அளவில் நுாற்றுக்கணக்கான அறிஞா்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் சுமார் ஐம்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள் படிக்கப்பட்டன.

குறிப்பு

1. முனைவர் துரை.மணிகண்டன், எழுதிய இணையமும் தமிழும் என்ற நூல். 2. முனைவர் மு.பொன்னவைக்கோ, எழுதிய இணையத் தமிழ் வரலாறு என்ற நூல்.

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads