நான்கு தண்டு இயங்கமைவு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நான்கு தண்டு இயங்கமைவு என்பது நான்கு இணைப்புகளைக் கொண்டது. இதில் ஓர் இணைப்பை நிலையாக வைப்பதன் மூலம், அதாவது அந்த இணைப்பில் எந்த ஓர் அசைவும் இல்லாதவாறு வடிவமைப்பதன் மூலம் வெவ்வேறு இயக்கங்களைப் பெறுவதாகும். மற்ற மூன்று இணைப்புகளும் வெவ்வேறான நகர்வுகளை வெவ்வேறான திசையில் நகரும் வண்ணம் அமைக்கபட்டிருக்கும். இதில் ஒன்று வணரியாகவும் (Crank) மற்றொன்று ஊசலாடியாகவும் (Oscillator) செயல்படும். இவ்விரண்டையும் இணைப்பதற்கு இணையி (Coupler) என்று பெயர். பொதுவாக சுழலி 360 பாகை உடையதாகவும், ஊசலாடி 0o முதல் 180o வரையில் அலைவு இயக்கத்தை கொடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.[1]


படத்தில் காட்டியுள்ளவாறு, A,B,C,D ஆகிய நான்கு புள்ளிகள் தண்டிற்கு மையப்புள்ளிகளாக அமைந்துள்ளன. இங்கு தண்டிற்கு இயக்கம் செலுத்தப்படும்போது, தண்டானது அதன் மையப்புள்ளியை பொறுத்து அசைவை ஏற்படுத்தும். இந்த இயக்கத்தினால் அதனுடன் தொடர்புடைய மற்றொரு தண்டும் அதன் இயக்கத்தை கடத்தும். இவ்வாறு இயக்கங்கள் கடத்தப்படுகின்றன.
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads