நாமக்கட்டி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வைணவர்கள் நெற்றியில் திருமண் இட்டுக்கொள்வதற்கு ஜடேரி கிராமத்தில் தயாரிக்கப்படும் நாமக்கட்டியைப் பயன்படுத்துவர். ஜடேரி கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடிசைத் தொழிலாக நாமக்கட்டியை உற்பத்தி செய்கின்றனர். நாமக்கட்டி தயாரிப்பதற்குத் தேவையான வெள்ளை மண்ணை, ஜடேரி கிராமத்திற்கு அருகில் உள்ள தென்பூண்டிப்பட்டு ஊராட்சியில் உள்ள கால்சியம் நிறைந்த வெள்ளைப் பாறைகளை வெட்டி, அரைத்து தூளாக்கி, அதனை தண்ணீரில் இரண்டு நாட்கள் ஊற வைப்பர். பின்னர் தண்ணீரையும், கழிவுகளையும் வெளியேற்றிய பிறகு, அடியில் தங்கி இருக்கும் வெள்ளைக் களிமண்ணிலிருந்து தயாரிக்கப்படும் நாமக்கட்டிகளை வெயிலில் காயவைப்பர். காய்ந்த நாமக்கட்டிகளை நாடு முழுவதும் விற்பனை செய்வர்.
Remove ads
ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குற்யீடு
2023ஆம் ஆண்டில் ஜடேரி கிராமத்தில் தயாரிக்கப்படும் நாமக்கட்டி புவிசார் குறியீடு பெற்றுள்ளது.[1][2]
வீட்டு வைத்தியத்தில் நாமக்கட்டி
நாமக்கட்டியில் கால்சியம் சத்து உள்ளது. இது தசைகள், நரம்பு மண்டலத்தின் இயக்கம் மற்றும் முகத்தில் உண்டாகும் பருக்கள், கொப்புளங்களை நீக்க நாமக்கட்டியைப் பயன்படுத்தலாம். நாமக்கட்டியை அரைத்து அதில் பன்னீர் கலந்து பருக்கள், கொப்புளங்கள் மீது தேய்ப்பது உண்டு. வறட்சியால் முகச் சுருக்கங்கள் நீங்க நாமக்கட்டியை அரைத்து முகத்தில் தேய்த்து கழுவலாம். மேலும் முகம். நீண்ட நேரம் குளிர்ச்சியாக காணப்படும்.[3]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads