நாமலார் மகன் இளங்கண்ணன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாமலார் மகன் இளங்கண்ணன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பெயர் கண்ணனார் என்று சிறப்பு விகுதி சேர்த்துக் கூறப்படாமல் கண்ணன் என்று கூறப்படுவதால் இப்புலவரை ஓர் அரசன் என்றோ, அரசு சார் பெருமகன் என்றோ கருதலாம்.

இந்தப் புலவர் இளங்கண்ணனின் தந்தை நாமலார். நாம் என்னும் உரிச்சொல் அச்சம் என்னும் பொருளைத் தரும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. எனவே நாமலார் என்னும் பெயர் அச்சம் தரும் எமனைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று என அறியமுடிகிறது.

இவரது பாடலாகக் குறுந்தொகை 250 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் உள்ளது. வினை முற்றி மீளும் தலைமகன் தன் தேர்ப்பாகனிடம் சொல்வதாக அதன் செய்தி உள்ளது.

மாலை நேரம் வந்தால் இரலைமான் கல்பரலையில் ஓடும் அருவி நீரை உண்டு உகளி(துள்ளி) விளையாடும். அவற்றிற்கு இடையூறு நேராமல் இருக்க மாலைக்காலம் வருவதற்கு முன்னர் சென்றுவிட வேண்டும். விரைந்து ஓட்டு. என்னவளின் கயற்கண்ணில் நீர் அரும்புமுன் போய்ச் சேரவேண்டும் - என்கிறான்.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads