நாம் (1953 திரைப்படம்)

1953 இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

நாம் (1953 திரைப்படம்)
Remove ads

நாம் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ம. கோ. இராமச்சந்திரன், எம். என். நம்பியார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இப்படத்தை மு. கருணாநிதி எழுத, ம. கோ. இராமச்சந்திரன், பி. எஸ். வீரப்பா, மு. கருணாநிதி ஆகியோர் பங்குதாரர்களாகி உருவாக்கிய மேகலா பிக்சர்சால் தயாரிக்கப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் நாம், இயக்கம் ...
Remove ads

கதை

குமரன் ஒரு ஜமீன்தாரி எஸ்டேட்டின் வாரிசு, அதை தன் தாய் மரண படுக்கையில் இறக்கும் போது தெரிந்து கொள்கிறான். ஆனால், உயிலையும் அது தொடர்பான சாசனத்தையும் மலையப்பன் (பீ எஸ் வீரப்பா) மறைத்து வைத்து விடுகிறார் . மருத்துவர் சஞ்சீவியும்( எம் ஜி சக்ரபாணி )சொத்தில் கவர்வதில் ஆர்வமாக இருக்கிறார், மேலும் தனது மகளை குமரனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். அவர் விருப்பத்திற்கு மாறாக குமரன் மலையப்பனின் சகோதரி மீனாவை (வீ. என் . ஜானகி ) காதலிக்கிறான். இடையில் குமரன் சொத்து உயில் பற்றிய மீனாவின் நோக்கத்தை சந்தேகித்து, கிராமத்தை விட்டு வெளியேறுகிறான். நகரத்தில் வந்ததும் ஒரு குத்துச்சண்டை வீரராக களம் இறங்குகிறான் . இதற்கிடையில் மலையப்பன் குமரனின் வீட்டிற்கு தீ வைக்கிறார், தீயில் குமரன் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால், மீனாவால் குமரன் காப்பாற்றப்படுகிறான் . காணாமல் போன சொத்து உயில் பற்றி மேலும் சிக்கல்கள் எழுகின்றன, அதே நேரத்தில், தீயில் உருகுலைந்த குத்துச்சண்டை வீரர் இரவில் சுற்றி வருவதை பேய் பற்றிய வதந்திகளுக்கு ஊரில் வழிவகுக்கிறது. இருப்பினும், இறுதியில்உண்மை வெளிப்பட்டு, காதலர்கள் மீனா - குமரன் ஒன்று சேருகின்றனர்.[3]

Remove ads

நடிப்பு

தயாரிப்பு

நாம் படத்தை ஜூபிடர் பிக்சர்சும், மேகலா பிக்சர்சும் இணைந்து தயாரித்தன. திரைப்படத் தயாரிப்பில் ஒரு புதியதாக இறங்கிய மேகலா பிக்சர்சின் கூட்டுப் பங்குதாரர்களாக மு. கருணாநிதி, எம். ஜி. சக்கரபாணி, எம். ஜி. ராமச்சந்திரன், பி. எஸ். வீரப்பா, ஏ. காசிலிங்கம் ஆகியோர் இருந்தனர். காசியின் காதல் கண்ணீர் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்ட கதைக்கு மு. கருணாநிதி திரைக்கதை, உரையாடல், பாடல்கள் போன்றவற்றை எழுதினார். எம். ஜி. ராமச்சந்திரன் அப்போது பிரபலமானவராக இல்ல்லை. அப்போது அவரது பெயர் "ராமச்சந்தர்" என்று திரையில் காட்டபட்டது. ஏனெனில் அது "கவர்ச்சி" என்று அவர் நினைத்தார், மேலும் ஏற்கனவே பிரபலமான நடிகராக இருந்த டி. ஆர். இராமச்சந்திரனிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ள எம். ஜி. ராம்சந்தர் என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்டார்.[3]

பாடல்கள்

இப்படத்திற்கு சி. எஸ். ஜெயராமன் இசையமைத்தார். பாடல் வரிகளை மு. கருணாநிதி எழுதினார்.[3]

மேலதிகத் தகவல்கள் பாடல், பாடகர் ...
Remove ads

வெளியீடு

நாம் மார்ச் 5, 1953 இல் வெளியாகி,[4] வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads