நாயன்மார்கட்டு சிறீ இராசராசேசுவரி அம்பாள் ஆலயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாயன்மார்கட்டு சிறீ இராசராசேசுவரி அம்பாள் ஆலயம் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டுக் கிராமத்திலுள்ள தொன்மையான முப்பெருஞ் சைவாலயங்களுள் ஒன்றாகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Remove ads
முன்னோடி ஆலயம்
நல்லைநகர் ஆறுமுக நாவலரின் மூதாதையர்களுக்குரிய காணியில், அச்சுவேலியிலிருந்து வந்த முருகர் என்பவர் இங்கு வாழ்ந்து, ஒரு வேப்பமரத்தின் கீழ் மேடை அமைத்து, பேய்ச்சி அம்பாளின் மரக்கட்டை உருவமைத்து வழிபட்டதாகவும் பின் முன்னோடி ஆலயம் அமைந்ததாகவும் கூறப்படுகின்றது. வேப்பமரத்தின் அருகே முன்னரே அன்னை வழிபாடு இருந்ததா அல்லது அவரே முன்னோடியாக அமைத்தாரா என்பதை அறிய முடியவில்லை. முருகர் பரம்பரையினர் ஆலயத் திருப்பணிகளைத் தொடர்ந்ததாகவும் பின் அவர்களின் நண்பர்களும் ஊரவர்களும் ஆலயப் பணியை மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
Remove ads
புதிய ஆலயப்பணி
கி.பி. 1521 இல் முருகரால் தொடங்கப்பட்ட இக்கோயில் 1571இல் அழிந்து, அன்னையின் மரச்சிலை நிலத்துள் மறைந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் அன்னை வழிபாடு தொடர்ந்து 1918இல் பெருமழை பெய்து கோயில் மீண்டும் அழிவுற்றதாகவும் கோயிலை மீள அமைக்க முயன்றபோது நிலத்தின் கீழிருந்த அன்னை சிலை மீட்கப்பட்டுக் கோயிலில் பயன்படுத்தப்பட்டதாகவும் அது இன்றுவரை ஆலயத்துள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
உசாத்துணை நூல்கள்
- நாயன்மார்கட்டு சிறீ இராசராசேசுவரி அம்மன் திருக்கோவில் திருக்குடழுழுக்கு சிறப்பு மலர் - 2020
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads