நாரிமன் இல்லம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாரிமன் ஹவுஸ் (Nariman House), இதனுள் இந்திய யூதர்களின் தொழுகைக்கூடம் (Chabad house) (எபிரேயம்: בית חב"ד[1][2][3] உள்ளது. ஐந்து மாடிகள் கொண்ட நாரிமன் இல்லம் இந்தியாவின் தெற்கு மும்பையின் கொலாபா பகுதியில் உள்ளது.[1] இக்கட்டிடத்தில் இந்திய யூதர்களின் சபாத் இல்லம் எனும் தொழுகைக்கூடம் உள்ளது. மேலும் இக்கட்டிட வளாகத்தில் யூத சமய கல்வி, சமூக மற்றும் பண்பாட்டு மையம் இயங்குகிறது.[4][5][6][7][8][9][10]
2008 மும்பை தீவிரவாத தாக்குதலில் நார்மன் இல்லத்தில் இருந்த ஆறு யூதர்கள், பாகிஸ்தான் நாட்டு இரண்டு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[11][12][13][14] யூதக் தொழுகைக்கூட போதகரின் இரண்டு வயது மகன் மோசே எனும் குழந்தை சந்திர சாமுவேல் என்பவரால் காப்பாற்றப்பட்டது.[15]
மகாராஷ்டிரா அரசின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் சுட்டதில் தீவிரவாதிகளில் நசீர் என்ற அபு உமர் மற்றும் பாபர் இம்ரான் கொல்லப்பட்டனர்.[16][17]
2017 ஆம் ஆண்டில் தீவிரவாதிகளால் சிதிலமடைந்த நார்மன் இல்லம் மறுசீரமைக்கப்பட்டது. நவம்பர் 2019ல் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டது.[18]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads