நாற்கால் நகர்வு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாற்கால் நகர்வு என்பது நிலம்வாழ் விலங்குகள் நான்கு கால்களைப் பயன்படுத்தி நடக்கும் முறையைக் குறிக்கும். பெரும்பாலான நடக்கும் விலங்குகள் நாற்கால் விலங்குகள் ஆகும். ஆடு, மாடு போன்ற பல பாலூட்டிகளும், பல்லி போன்ற ஊர்வனவும் நாலுகாலிகள் ஆகும். பறவைகள், மனிதர், பூச்சிகள், பாம்புகள் என்பன நாலுகாலிகள் அல்ல. சில பூச்சிகளும், பறவைகளும் இதற்கு விதிவிலக்காக நான்கு கால்களைப் பயன்படுத்துவதும் உண்டு.

Remove ads
நாலுகாலிகளும், டெட்ராபாட்டுகளும்
நான்கு முன்னுறுப்புக்கள் (limb) கொண்ட எல்லா விலங்குகளும் நாலுகாலிகள் அல்ல. கைகள், இறக்கைகள் என்பன உண்மையில் படிமலர்ச்சி (கூர்ப்பு) அடைந்த கால்களே. இதனால் கால்கள், கைகள், இறக்ககைகள் என்பன உள்ளிட்ட நான்கு உறுப்புக்களைக் கொண்ட விலங்குகள் டெட்ராபோடா என்னும் அறிவியல் வகைப்பாட்டு அலகுக்குள் அடங்குகின்றன. இவை நாலுகாலி மூதாதைகளைக் கொண்ட, பாலூட்டிகள், ஊர்வன, நிலநீர் வாழிகள், பறவைகள் போன்ற எல்லா முதுகெலும்பிகளையும் உள்ளடக்குகிறது.
படிமலர்ச்சி உயிரியலில், நாலுகாலிகளுக்கும், டெட்ராபாட்டுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளைப் புரிந்து கொள்வது அவசியம். முக்கியமாக, இருகாலிகள், இறக்கையுள்ளவை, மற்றும் கால்கள் வேறு தேவைகளுக்காக மாறுதலடைந்த விலங்குகள் என்பன தொடர்பில் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும். இவை நாலுகாலிகள் அல்ல, ஆனால் டெட்ராபாட்டுகள். கால்கள் இருந்து பின்னால் முழுமையாகப் பயனற்றுப் போன பாம்பினங்களும் டெட்ராபாட்டுக்கள் வகைக்குள்ளேயே அடங்குகின்றன.
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads