நாவாய்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வாய்நீரில் கிடக்கும் நாக்கு போல் நுனி குறுகி நீரில் ஓடும் கலத்தை நாவாய் என்றனர். இந்த நாவாய் வங்கம், கலம் என்னும் சொற்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளன. நாவாயின் தோற்றம் பற்றியும், அவை இருந்த துறைமுகங்கள் பற்றியும் சங்கப்பாடல்களில் குறிப்புகள் உள்ளன. இவற்றைத் தொகுத்து நோக்கும்போது தமிழக நாவாய் பற்றிய வரலாற்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

  • நாவாய் என்பது கடலில் ஓடும் மரக்கலக் கப்பல். [1]

துறைமுகத்தில்

  • நாவாயில் வந்த வெள்ளைக் குதிரைகளும், வடதிசையிலிருந்து வந்த வளப்பொருள்களும் நீர்ப்பெயற்று என்னும் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டன.[2]
  • சாலியூர் துறைமுகத்தில் நாவாய்கள் ஆடிக்கொண்டே நின்றன.[3] [4]
  • புகார் துறைமுகத்தில், யானை கட்டியிருக்கும் வெளிறு என்னும் கூடம் போல, அலைமோதும் கடலில் கூம்பில் கொடி பறக்கும் நாவாய்கள் பல நெருக்கமாக நின்றுகொண்டிருந்தன. [5]
  • கரிகாலனின் முன்னோர் காற்றைக் கட்டுப்படுத்தி நாவாய் என்னும் பாய்மரக் கப்பலை ஓட்டி வாணிகம் செய்துவந்தனர்.[6]
Remove ads

தோற்றம்

  • நாவாயில் உள்ள கூம்பில் இதை என்னும் பாய்களைக் கயிற்றால் பிணித்துக் கட்டியிருப்பார்கள். புயலில் இதைக்கயிறு அறுந்துபோவது உண்டு. [7]
  • அவற்றில் நாட்டுக்கொடிகள் பறந்தன.[8]
  • கட்டுக்குள் நில்லாது நாவாய்கள் அசைவது உண்டு.[9]

பன்னாட்டு நாவாய்

  • பன்னாட்டு நாவாய்கள் தமிழகத் துறைமுகங்களில் உலவின.[10]
  • வானவன் என்னும் சேரமன்னன் கடலில் நாவாய் ஓட்டும்போது பிற நாவாய்கள் செல்லக்கூடாது. (இது முசிறித் துறைமுக்க் கட்டுப்பாடு) [11]

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads