நா. அருணாச்சலம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நா. அருணாச்சலம் (12 மே 1939 – 23 மே 2016) என்பவர் ஒரு பெரியாரியலாளர், தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனத் தலைவரும், நந்தன் வழி இதழின் ஆசிரியரும், மாணவர் நகலகம் நிறுவனருமாவார். இவர் ஆனா ரூனா என்று தமிழ் மொழிப் பற்றாளர்களால் அழைக்கப்பட்டவர்.

விரைவான உண்மைகள் நா. அருணாச்சலம், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கை

நா.அருணாச்சலம் திருவாரூர் மாவட்டம், திருகண்ணபுரத்தில் பிறந்தவர். வருவாய்த் துறையில் அலுவலராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். இறுதியாக செங்கல்பட்டில் வட்டாட்சியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். 'அடையாறு மாணவர் நகலகம்' என்ற வணிக நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவந்தவர்.[2]

செயல்பாடுகள்

1956இல் இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு, தமிழர்களுக்கு என்று தனித்தமிழ் மாநிலம் உருவானது தங்களுக்கு என மாநிலம் அமைந்த நாளை அந்தந்த மாநிலங்கள் தங்கள் மாநில நாளாக கொண்டாடிய நிலையில் தமிழகத்தில் யாரும் இந்த நாளை கொண்டாடாத நிலையில் தமிழகம் அமைந்த நவம்பர் முதலாம் நாளை தனது சொந்த செலவில் தமிழகப் பெருவிழாவாக பல ஆண்டுகள் எடுத்தார்.[3] 1990 களின் பிற்பகுதியில் தமிழறிஞர்களையும் தமிழின உணர்வாளர்களையும் ஒருங்கிணைத்து, மொழி உணர்வையும் இன உணர்வையும் தட்டியெழுப்ப ”தமிழ்ச் சான்றோர் பேரவை” என்ற அமைப்பை நிறுவினார். தமிழ் நாடெங்கும் தமிழ்ச் சான்றோர் பேரவை சார்பில் கருத்தரங்குகளும், பரப்புரைகளும், மாநாடுகளும் நடத்தினார். 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் நாள், தமிழ்வழிக் கல்வியைக் கட்டாயமாக்கிட வலியுறுத்தி, தமிழறிஞர் தமிழண்ணல் தலைமையில் 102 தமிழறிஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் தொடங்கினார்கள். பல்வேறு தமிழ் அமைப்புகளையும் தமிழ் உணர்வாளர்களையும் இணைத்துக் கொண்டு தமிழ்ச் சான்றோர் பேரவையால் முன்னெடுத்த மாபெரும் போராட்டம் இது. அப்போராட்டத்தின் பயனாக, அன்றைய தி.மு.க. ஆட்சி, 5 ஆம் வகுப்பு வரை கட்டாயமாக தமிழ் அல்லது தாய்மொழி மொழிப்பாடமாக இருக்க வேண்டும், பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று ஆணையிட்டது. ஆனால் அது சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும், அருணாச்சலம் உச்ச நீதிமன்றத்தில் தம் சொந்தச் செலவில் மேல்முறையீடு செய்தார்.[4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads