நா. ரா. நாராயணமூர்த்தி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாகவாரா ராமராவ் நாராயண மூர்த்தி (கன்னடம்: ಎನ್. ಆರ್. ನಾರಾಯಣಮೂರ್ತಿ) இன்ஃபோசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவிய இந்திய தொழிலதிபர். நாராயண மூர்த்தி 2002ஆம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் தலைமை செயற்குழு அதிகாரியாக பணியாற்றி, தற்போது இக்குழுமத்தின் கௌரவ செயல்குழுவின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார். பணியிலிருந்து ஒய்வு பெற்றபின் தனது நேரத்தை சமூகசேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் செலவிடுகிறார்.

விரைவான உண்மைகள் நாகவாரா ராமராவ் நாராயண மூர்த்தி, பிறப்பு ...

இந்திய அரசு, அவரது தொண்டினைப் பாராட்டி தேசத்தின் உயரிய விருதாகிய பத்ம விபூசண் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

Remove ads

இளமை

நாராயண மூர்த்தி, 1946ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 20ம் நாள் கன்னட மத்வபிராமண குடும்பத்தில் பிறந்தார். மின் பொறியியல் பட்டத்தை மைசூர் பல்கலைகழகம் சார்ந்த தேசிய பொறியியல் கழகத்தில் 1967ம் ஆண்டு பெற்றார். பொறியியலில் முதுநிலைப் பட்டத்தை 1969ஆம் ஆண்டு இந்திய தொழிற்நுட்பக் கழகம், கான்பூரில் பெற்றார்.

பணிபுரிந்த அனுபவங்கள்

கல்லூரிப் படிப்பை முடித்தபின் 1969 ஆம் ஆண்டு அஹமதாபாத் இந்திய மேலாண்மைக் கழகத்தின் கணினித்துறையில் (Chief System Programmer) பணிக்குச் சேர்ந்தார். சுமார் மூண்றாண்டுகளுக்குப் பிறகு 1972 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் SESA நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads