நிகர ஓட்ட விகிதம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிகர ஓட்ட விகிதம் (Net Run Rate) அல்லது சுருக்கமாக நி.ஓ.வி (NRR) என்பது துடுப்பாட்டத்தில் அணிகளின் செயல்திறனை அல்லது ஆட்டத்தை பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு புள்ளியியல் முறைமையாகும். வரையிட்ட நிறைவுப் போட்டிகளில் அணிகளை தரவரிசைப்படுத்த மிகவும் கூடுதலாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு தனி ஆட்டத்தில் நிகர ஒட்ட விகிதமானது ஒரு நிறைவிற்கு அவ்வணி எடுக்கும் ஓட்ட விகிதத்திலிருந்து எதிரணி ஒரு நிறைவிற்கு எடுக்கும் ஓட்ட விகிதத்தை கழித்துப் பெறுவதாகும்.
Remove ads
விரிவான விளக்கம்
ஓர் அணியின் ஓட்ட விகிதம் என்பது அவ்வணி எடுத்த ஓட்டங்களை அவ்வணி எதிர்கொண்ட நிறைவுகளால் வகுத்துப் பெறுவதாகும். ஓர் நிறைவிற்கு ஆறு பந்துகள் இருப்பதால் இவ்வாறு கணக்கிட ஒவ்வொரு பந்தும் 1/6 நிறைவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. வழமையான துடுப்பாட்டத்தில் இது .1 நிறைவாக கொள்ளப்படுகிறது.
ஓர் அணியானது 50 நிறைவுகளில் 250 ஓட்டங்கள் எடுத்ததாயின் அதன் ஓட்ட விகிதம் ஆகும். இதே ஓட்ட எண்ணிக்கையை அவ்வணி 47.5 நிறைவுகளில் எடுத்திருந்தால், அவர்களது ஓட்ட விகிதம் ஆக இருக்கும்.
நிகர ஓட்ட விகிதத்தின் கருதுகோளானது எதிரணியின் இறுதி ஓட்ட விகிதத்தை அவ்வணியின் ஓட்ட விகிதத்திலிருந்து நீக்கிப் பெறுவதை மையப்படுத்தி உள்ளது. இதில் உள்ள ஒரு சிக்கல் ஏதேனும் அணி வரையிட்ட நிறைவுகளை முழுமையாக ஆடாது அனைத்து மட்டையாடுபவர்களையும் இழக்கும்போது அவர்கள் எதிர்கொண்ட பந்துகளைக் கொண்டு வகுக்காமல் முழுமையான நிறைவுகளால் வகுக்கப் படுகிறது. அதாவது ஒருநாள் பன்னாட்டு துடுப்பாட்டத்தில் 50 பநிறைவுகளாலும் இருபது20 போட்டிகளில் 20 நிறைவுகளாலும் வகுக்கப்படுகிறது.
வழமையாக, ஓரு பருவத்தில் அணிகள் பெற்ற ஓட்டங்களும் நிறைவுகளும் கீழ்கண்டவாறு தொகுக்கப்பட்டு போட்டி பட்டியலில் அணிகள் ஒப்பிடப்படுகின்றன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads