நிகழ்படப் பாடம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நிகழ்படப் பாடம் (Video lesson) அல்லது நிகழ்பட விரிவுரை என்பது கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு தலைப்பிற்கான கற்றல் பொருட்களை வழங்கும் நிகழ்படம் ஆகும்.

நிகழ்படக் கற்றலுக்கான வடிவம் மாறுபடலாம். இது ஓர் ஆசிரியர் ஒளிப்படக்கருவியினைப் பார்த்து பேசும் நிகழ்படமாகவோ, புகைப்படங்கள் மற்றும் தலைப்பு பற்றிய உரையாகவோ அல்லது இவற்றின் கலவையாகவோ இருக்கலாம். யாகூவின் கேலிப்படப் பேடைப் பயன்படுத்தி எழுதப்பட்ட குறிப்புகளின் மூலம் கான் அகாடமி சல்மான் கானின் குரலில் கணிதத்தைக் கற்பித்ததது. பின்னர் இவை யூடியூப்பில் பதிவேற்றப்பட்டன. இத்தகைய விரிவுரைகள் தலைகீழ் வகுப்பறைக் கற்பித்தலின் முக்கிய பகுதியாகும், இதில் தலைப்பின் முக்கியப் பாடப் பகுதிகள் நிகழ்படப் பாடமாக நடத்தப்படுகிறது . [1] [2] [3]

மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்து ஒரு குழுவிற்கு நேரடியாகவும் மற்றொரு குழுவிற்கு நிகழ்படம் மூலமாகவும் விரிவுரை நடத்தப்பட்டது. இரண்டு குழுக்களிலும் மாணவர்களின் பதில் அளிக்கும் விதத்தில் எந்த பெரிய வேறுபாடும் நிகழவில்லை என ஆய்வு முடிவு தெரிவித்தது.[4] ஆனால், அகநிலை மதிப்பீட்டில் சில வேறுபாடுகள் இருந்தன: 48% மாணவர்கள் நேரடிப் பாடங்களை விரும்பினர், 27% நிகழ்படப் பாடங்களை விரும்பினர் மற்றும் 25% பேர் 'நடுநிலை' எனக் குறிப்பிட்டுள்ளனர். 100 க்கும் மேற்பட்ட ஆய்வுகளை ஆராய்ந்ததன் மூலம் 75% நேரங்களில் நிகழ்படம் மூலமாக பாடங்களைக் கற்பதனை விரும்பியுள்ளனர். நூலுக்குப் பதிலாக நிகழ்படங்களின் மூலமாக கற்கும் போது சுமார் 7 மதிப்பெண்களை அதிகமாகப் பெறுவதும் கண்டறியப்பட்டது.[5]

Remove ads

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads