நிக்கல்(II) கார்பனேட்டு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிக்கல்(II) கார்பனேட்டு(Nickel(II) carbonate) என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிக்கல் மற்றும் கார்பனேட்டுகலவைகள் சேர்ந்த ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.தொழில்துறை கண்ணோட்டத்தில், மிக முக்கியமான நிக்கல் கார்பனேட்டாகக் கருதப்படுவது அடிப்படை நிக்கல் கார்பனேட்டாகும். இதனுடைய மூலக்கூற்று வாய்ப்பாடு Ni4CO3(OH)6(H2O)4 ஆகும்.ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் எளிய நிக்கல் கார்பனேட்டு NiCO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கார்பனேட்டு மற்றும் அறுநீரேற்று ஆகியனவாகும்.பச்சை நிறமாகக் காணப்படும் இவையணைத்தும் Ni2+ அயனிகளைக் கொண்ட இணைக்காந்தப் பண்பு கொண்டவையாகும். தாதுப் பொருட்களில் இருந்து நிக்கல் தயாரிக்கையில் நீர்ப்பகுப்பு தூய்மைப்படுத்தும் செயல்முறையில் இடைவிளை பொருளாக இவ்வடிப்பை கார்பனேட்டுகள் தோன்றுகின்றன. மற்றௌம் இவை நிக்கல் மின்முலாம் பூசுதலிலும் பயனாகின்றன[3].
Remove ads
வினைகள்
நீர்த்த அமிலங்களுடன் நிக்கல் கார்பனேட்டு நீராற்பகுக்கப்பட்டு இச்செயல்முறையின் விளைவாக [Ni(H2O)6]2+ அயனிகளையும் ,நீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியனவற்றைக் கொடுக்கிறது. இக்கார்பனேட்டுகளைநீற்றுதல் வினைக்கு உட்படுத்தினால் நிக்கல் ஆக்சைடுகள் விளைகின்றன.
- NiCO3 → NiO + CO2
வினையில் ஈடுபட்ட முன்னோடியின் அடிப்படையில் ஆக்சைடுகளின் பண்புகள் அமைகின்றன. அடிப்படை கார்பனேட்டில் இருந்து தயாரிக்கப்படும் ஆக்சைடுகள் பெரும்பாலும் வினையூக்கிகளாகப் பயன்படுகின்றன. நிக்கல் சல்பேட்டு மற்றும் சோடியம் கார்பனேட்டுக் கரைசல்கள் வினைப்படுவதால் அடிப்படை நிக்கல் கார்பனேட்டுகள் உருவாகின்றன:
4 Ni2+ + CO32− + 6 OH− + 4 H2O → Ni4CO3(OH)6(H2O)4
கார்பன் டை ஆக்சைடு முன்னிலையில் நிக்கலை மின்பகுப்பு ஆக்சிசனேற்றம் செய்வதனால் நீரேற்று கார்பனேட்டு தயாரிக்கப்படுகிறது.:[4]
- Ni + O + CO2 + 6 H2O → NiCO3(H2O)4
Remove ads
பயன்கள்
பல வினையூக்கிகள் தயாரிப்பதற்கு முன்னோடியாகவும் , சிலவகை பீங்கான் செயல்முறைகளிலும் நிக்கல் கார்பனேட்டு பயன்படுகிறது.
பாதுகாப்பு
நிக்கல் கர்பனேட்டு ஒரு மிதமான நஞ்சு வேதிப்பொருளாகும். எனவே நீண்ட நாள் தொடர்பு தவிர்க்கப்படல் வேண்டும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads