நிக்கல் ஆக்சைடு ஐதராக்சைடு
கனிமச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிக்கல் ஆக்சைடு ஐதராக்சைடு (Nickel oxide hydroxide) என்பது NiO(OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் எந்தக் கரைபானிலும் கரையாது ஆனால் காரம் மற்றும் அமிலத்தால் பாதிக்கப்படும். நிக்கல்-உலோக ஐதரைடு மின்கலத்தில் ஒரு பகுதிப்பொருளாக நிக்கல் ஆக்சைடு ஐதராக்சைடு அடங்கியுள்ளது.
Remove ads
தொடர்புடைய பொருட்கள்
நிக்கல்(III) ஆக்சைடுகள் பெரும்பாலும் மிகக்குறைவாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் விகிவிதவியல் தன்மையற்ற சேர்மங்கள் எனக் கருதுகிறார்கள். நிக்கல்(III) ஆக்சைடு படிகவியல் ஆய்வுகளின்படி சரிபார்க்கப்படவில்லை, கரிம வேதியியல் பயன்பாடுகளுக்கும் நிக்கல் ஆக்சைடுகள் அல்லது பெராக்சைடுகள் தளத்திலேயே உருவாக்கிக் கொள்ளப்படுகின்றன. நிக்கல் பெராக்சைடு (சி.ஏ.எசு # 12035-36-8) சேர்மம் நிக்கல் ஆக்சைடு ஐதராக்சைடு உடன் நெருங்கிய தொடர்பும் அதே அடையாளங்களையும் பெற்றுள்ளது [1].
Remove ads
கட்டமைப்பு
நிக்கல்(II) ஐதராக்சைடின் புருசைட்டு பல்லுருவத்தை ஒத்ததாகவே ஐதரசன்களில் பாதி அளவைக் கொண்டு இதனுடைய அடுக்குக் கட்டமைப்பும் உள்ளது. நிக்கலின் ஆக்சிசனேற்ற எண் 3+ ஆகும்[2].
தயாரிப்பு
நிக்கல்(II) நைட்ரேட்டுடன் நீரிய பொட்டாசியம் ஐதராக்சைடு சேர்த்து புரோமினை ஆக்சிசனேற்றியாகக் கொண்டு வினைபுரியச் செய்தால் நிக்கல் ஆக்சைடு ஐதராக்சைடு தயாரிக்கலாம் :[3]
- Ni(OH)2 + KOH + 0.5 Br2 → KBr + H2O + NiOOH.
கரிம வேதியியல் பயன்
பென்சைல் ஆல்ககாலை ஆக்சிசனேற்றம் செய்து பென்சாயிக் அமிலமாக மாற்றும் வினையில் நிக்கல்(III) ஆக்சைடுகள் வினையூக்கிகளாகச் செயல்படுகின்றன:[4]
இதேபோல 3-பியூட்டனாயிக் அமிலத்தை பியூமரிக் அமிலமாக மாற்றும் இரட்டை ஆக்சிசனேற்ற வினையிலும் இது வினையூக்கியாகச் செயல்படுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads