நிங்கோல் சக்கோபா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிங்கோல் சக்கோபா(Ningol Chakouba - Inviting Sister for Lunch) என்னும் விழா, இந்திய மாநிலமான மணிப்பூரில் கொண்டாடப்படுகிறது. இது உடன்பிறப்புகளுக்கு இடையிலான பந்தத்தை போற்றும் விழாவாகும். திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற அக்கா தங்கைகளை தாய்வீட்டுக்கு அழைத்து, சகோதரர்கள் விருந்தளிக்கும் நிகழ்வு நடைபெறும். இதை மணிப்பூரின் பாரம்பரிய இன மக்களான மெய்தெய் மக்கள் கடைபிடிக்கின்றனர். இந்த நாளை மணிப்பூர் அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. இது மணிப்பூரில் கொண்டாடப்படும் பூர்வீக விழாக்களில் முக்கியமாகும்.

காலை பதினோரு மணியானதும், சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு உணவுப் பதார்த்தங்களை எடுத்துக் கொண்டு, பாரம்பரிய ஆடைகளில் தங்கள் தாய்வீட்டுக்கு செல்கின்றனர். நிங்கோல் என்ற மணிப்பூரிய சொல்லுக்கு சகோதரி என்றும், சக்கோபா என்ற சொல்லுக்கு விருந்துக்கு அழைத்தல் என்றும் பொருள்.[1]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads