நிசான்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நிசான் மோட்டார் கார்ப்பரேசன் ('Nissan Motor Corporation) என்பது ஒரு சப்பானியப் பன்னாட்டுத் தானுந்து உற்பத்தி நிறுவனம் ஆகும். இது பொதுவாக நிசான் என்னும் சுருக்கப் பெயரால் அறியப்படுகிறது. இதன் தலைமையகம் சப்பானின் யொக்கொகாமாவில் உள்ள நிசிக்கு என்னும் இடத்தில் அமைந்துள்ளது. 1999ல் இருந்து, பிரான்சு நாட்டுத் தானுந்து உற்பத்தி நிறுவனத்துடன் சேர்ந்து, ரெனால்ட்-நிசான் அலையன்சு எனப்படும் கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாகச் செயற்பட்டு வருகிறது. 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, நிசான் நிறுவனத்தில் வாக்குரிமையுடன் கூடிய 43.4% பங்குகளை ரெனால்ட் கொண்டுள்ளது. ரெனால்ட் நிறுவனத்தில் வாக்குரிமை இல்லாத 15% ரெனால்ட் நிறுவனப் பங்குகளை நிசான் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...

நிசான் மோட்டார் கார்ப்பரேசன் நிசான், இன்பினிட்டி, டட்சன், நிஸ்மோ ஆகிய பெயர்களில் தானுந்துகளை உற்பத்தி செய்து விற்பனைக்கு விடுகிறது. 2012 ஆண்டு நிலவரப்படி, நிசான், உலகின் ஆறாவது பெரிய தானுந்து உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. டொயோட்டா, ஜெனரல் மோட்டார்ஸ், பொக்ஸ்வாகன், ஐயுண்டாய், போர்ட் ஆகியவை இதற்கு முன்னுள்ள ஐந்து நிறுவனங்கள்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads