நிஜாம் அருங்காட்சியகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிஜாமின் அருங்காட்சியகம் (Nizam's Museum) என்பது ஐதராபாத்தில் அமைந்துள்ள முன்னாள் அரண்மனை ஆகும். இது ஐதராபாத்தில் புரானி ஹவேலி என்ற இடத்தில் அமைந்துள்ளது.[1] இந்த அருங்காட்சியகம் ஐதராபாத் மாநிலத்தின் கடைசி நிஜாம் ஏழாம் ஆசஃப் ஜஹா ஒஸ்மான் அலி கான், தனது வெள்ளி விழா கொண்டாட்டங்களில் பெறப்பட்ட பரிசுப் பொருட்களைக் கொண்டுள்ளது..[2]
அருங்காட்சியகத்தில் ஒரு களஞ்சியம் உள்ளது. கடைசி நிஜாமிற்கு 1936 இல் நடைபெற்ற வெள்ளிவிழா கொண்டாட்டங்களின் போது பிரமுகர்கள் மூலம் வழங்கப்பட்ட நினைவு பரிசுகள் உள்ளது. ஐதராபாத்தில் உள்ள அனைத்து முக்கிய கட்டிடங்களின் வடிவத்தில் உருது மொழியில் மேற்கோள்கள் எழுதப்பட்டு வெள்ளியால் செய்யப்பட்ட மாதிரிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.[3]
Remove ads
வரலாறு
அருங்காட்சியகம் 2000 பிப்ரவரி 18 அன்று நிஜாம் அறக்கட்டளையால் பொது மக்களுக்கு திறக்கப்பட்டது.
2018 இல் திருட்டு
செப்டம்பர் 2018 ல் ஹைதராபாத்தின் இரண்டு இளைஞர்கள் அருங்காட்சியகத்தின் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி புகைப்படக்கருவிகளை கைப்பற்றி அங்குள்ள வைரங்கள், மற்றும் சில விலையுயர்ந்த பொருட்களை திருடுவதற்காக உள்ளே நுழைந்தனர். இதனால் இந்த அருங்காட்சியகம் செப்டம்பர் மாதம் தேசியப் பத்திரிகையில் ஒரு பகுதியாக மாறியது.[4] [5] ஆனால் அவர்கள் இருவரும் விரைவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்திற்குப் பின்னர் அந்த அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.[6][7]
Remove ads
தொகுப்புக்கள்
இந்த அருங்காட்சியகத்தில் கடைசி நிஜாம் வெள்ளி விழா கொண்டாட்டங்களுக்கான ஒரு தங்க சிம்மாசனம், வைரங்கள், ஐதராபாத் ஜூபிலி ஹால், மிர் ஓஸ்மான் அலி கானின் வண்ணமயமான கண்ணாடி ஓவியம் ஆகியவை இங்குள்ளது.. மேலும், ஒரு உருது மொழியில் எழுதப்பட்ட மரப்பெட்டியில் முத்து, வைரங்கள் மற்றும் வைரங்கள் அடங்கிய விலையுயர்ந்த நகைகள். வாசனை பொருட்கள் வைக்க ஒரு பெட்டி (புலவாச்சா அரசன் அளித்தது) வைரங்கள் பதிகப்பட்ட வெள்ளி காஃபி கோப்பை, வெள்ளியிலான கடவுள் கிருஷ்ணன் மரத்தடியில் மாடுகளுடன் புல்லாங்குழல் வாசிப்பது போன்ற உருவம் போன்ற பல பொருட்கள் இங்கு இவைக்கப்பட்டுள்ளன[8][9][10] 1930 இல் தயாரிக்கப்பட்ட ஒரு ரோல்ஸ் ராய்ஸ், பேக்கர்டு மற்றும் ஜாகுவார் மார்க் வி ஆகிய பழமையான மகிழுந்துகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில், ஆறாவது நிஜாம் ஆசாப் ஜா மஹ்பூப் அலி கானின் அலமாரி இடம்பெற்றுள்ளது. இது உலகின் மிகப்பெரிய அலமாரியாகும். 150 ஆண்டு பழமையானதும், கைகளால் இயக்கப்படுவதுமான ஒரு தானியங்கி மேல் தூக்கியும், 200 வருட பழமையான நூதன முரசு ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads