நித்திய கல்யாணி
தாவர இனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நித்தியக் கல்யாணி, நயனதாரா அல்லது பட்டிப்பூ, சுடுகாட்டுமல்லி என்றும் சுடுகாட்டுப்பூ (பூச்செடி) என்றும் அழைக்கப்படும் செடி, மடகாசுக்கரில் மட்டுமே காணப்பட்ட ஒருவகைச் செடியாக இருந்தது. பின்னர் இது வெப்பமண்டலப் பகுதிகளுக்கும், மென்வெப்பமண்டலப் படுதிகளுக்கும் பரவியது. இச்செடியின் பூ வெள்ளை நிறத்திலோ, இளஞ்சிவப்பு நிறத்திலோ காணப்படும். பூவிதழ்கள் கூடும் நடுப்பகுதியில் அடர்ந்த சிவப்பு நிறமாகக் காணப்படும். இதன் உயிரியல் வகைப்பாட்டுப் பெயர் காத்தராந்தசு ரோசியசு (Catharanthus roseus) என்பதாகும்.


மடகாசுக்கரில் இயற்கையில் காணப்படும் வகையான இச்செடி இன்றையச் சூழலில் அருகிவருகின்றது. இதற்கான காரணம் காடுகளை வெட்டியும் எரித்தும் வேளாண்மை செய்யும் முறையால் இயற்கைச் சூழிடங்கள் அழிகின்றன[1]
இம்மருந்துச்செடி ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வளரும். இரு மாதங்களில் 60 முதல் 80 சென்றி மீட்டர் உயரம் வளரும் செடியாகும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் 2.5 – 9 செ.மீ நீளமும் 1 – 3.5 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். அகலமான இந்த இலைகளின் மேற்பரப்பு பளபளப்பாகவும், நுண்மயிர்கள் இல்லாமலும் இருக்கும். இலைகள் எதிரெதிராக அமைந்திருக்கும். இலைக்காம்பு 1 - 1.8 செ.மீ நீளம் இருக்கும். இலையின் நடு நரம்பு வெளிறிய பச்சை நிறத்தில் இருக்கும். இலைக்காம்பு [2][3][4][5]
Remove ads
மருத்துவப் பயன்கள்
நீரிழிவு, சிறுநீர்த்தாரை, வெள்ளை இரத்தப்புற்று நோய். இப்பூச்செடியில் இருந்து இரத்தப் புற்றுநோய் (இலூக்கேமியா), சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கான மருந்துகள் பிரித்தெடுக்கப்படுவதால்[1] அதிகம் அறியப்படுகின்றது. குறிப்பாக வின்பிளாசிட்டீன், வின்க்கிரிசுட்டீன் போன்ற உயிர்வேதிப் பொருள்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. சென்னை கிருத்துவக் கல்லூரியிலும் மேலை நாடுகளிலும் இதற்கான ஆய்வுகள் நடைபெறுகின்றன[6].
நித்ய கல்யாணி செடியினை நேரடியாக உட்கொள்வது தீவிர நச்சுத்தன்மையை உடலில் உண்டாக்கும்
Remove ads
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
