நித்யஸ்ரீ மகாதேவன்

தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் From Wikipedia, the free encyclopedia

நித்யஸ்ரீ மகாதேவன்
Remove ads

நித்யஸ்ரீ மகாதேவன் (Nithyasree Mahadevan) ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. டி. கே. பட்டம்மாள் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது

விரைவான உண்மைகள் நித்யஸ்ரீ மகாதேவன், பின்னணித் தகவல்கள் ...

டி.கே.பட்டம்மாளின் மகன்கள் சிவகுமார் மற்றும் லட்சுமணன் ஆவர். சிவகுமாரின் மகள், நித்யஸ்ரீ மகாதேவன் ஆவார். நித்யஸ்ரீயின் சகோதரியின் மகளாகிய லாவண்யா சுந்தரராமன், வளர்ந்துவரும் இளம் இசைக் கலைஞர் ஆவார்.

Remove ads

பிறப்பு

நித்யஸ்ரீ மகாதேவன், தமிழ்நாட்டில், திருவையாற்றில் லலிதா மற்றும் சிவகுமார் தம்பதியருக்கு மகளாக ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி, 1973 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர், பிரபல கர்நாடக இசைப் பாடகியான டி. கே. பட்டம்மாள் அவர்களின் மகன்வழி பேத்தி மற்றும் மிருதங்க வித்வானான பாலக்காடு மணி ஐயரின் பேத்தி ஆவார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

முதலில், தனது தாயாரிடம் சங்கீதப் பயிற்சி மேற்கொண்டார். மேலும், டி. கே. பட்டம்மாளிடம் சங்கீதம் கற்ற அவர், சிறு வயதிலிருந்தே அவரது கச்சேரிகளில் பங்கேற்றார். அவரது தந்தை பாலக்காடு மணி ஐயரின் சிஷ்யன் என்பதாலும், அவரை சங்கீதக் கலையில் மேலும் ஊக்குவித்தார். சங்கீதக் கச்சேரிகளுக்கிடையே தனது பள்ளிப்படிப்பை முடித்த அவர், வணிகவியலில் தனது இளங்கலைப் பட்டதை எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியில் பெற்றார்.

இசைப் பயணம்

தனது பதினாறாவது வயதில், ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி, 1987ஆம் ஆண்டில் செம்மொழி இசை இளைஞர் சங்கத்திற்காகப் பாடியதே, அவரது முதல் மேடை கச்சேரியாகும். ஒரு மணி நேரம் நடைபெற்ற இக்கச்சேரி பிரபலமான கர்நாடக சங்கீத இசை வல்லுனர்களான டி. கே. பட்டம்மாள், டி. கே. ஜெயராமன், விஜய் சிவா, ஆர். கே. சிவகுமார், கே. வி. நாராயணஸ்வாமி போன்றோர் முன்னிலையில் நடந்தது. அவரது பாட்டியைப் போலவே, அவரும் பாபநாசம் சிவன் மற்றும் கோபாலகிருஷ்ண பாரதி அவர்களின் பாடல் தொகுப்புகளை மேடையில் பாடினார். பாபநாசம் சிவன் அவர்களின் இசைத் தொகுப்புகளைத் தொகுத்து இரண்டு ஆல்பங்களாக வெளியிட்ட அவர், ‘பாபநாசம் சிவன் – எ லெஜென்ட்’ என்ற தலைப்பில் ஒரு விரிவுரையும் கோவையில் கொடுத்துள்ளார். கோபாலகிருஷ்ண பாரதி அவர்களின் இசைத் தொகுப்புகளைத் தொகுத்து இரண்டு ஆல்பங்களாக வெளியிட்ட அவர், கோவையில் உள்ள பி.எஸ்.ஜி அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் அவரது வாழ்க்கை மற்றும் கலைக்காக அவரது அர்ப்பணிப்பு பற்றி பேசியுள்ளார்.

அவர் 100க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய சபாக்களிலும் பாடிய அவர், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா என உலகம் முழுவதும் பல நாடுகளில் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார். கர்நாடக சங்கீத வல்லுனராக மட்டுமல்லாமல், பக்திப் பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், சினிமா பாடல்கள் என நூற்றுக்கணக்கானப் பாடல்களைப் பாடிய அவர், இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த கொண்டாட்டத்தை வெளிபடுத்தும் விதமாகப் பல தேசபக்திப் பாடல்களைக் கச்சேரிகள் ஒருங்கிணைத்து பாடியுள்ளார்.

இல்லற வாழ்க்கை

தனுஜாஸ்ரீ மற்றும் தேஜாஸ்ரீ என்று இரு மகள்கள் உள்ளனர். இவரின் கணவர் மகாதேவன் டிசம்பர் 21 ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டில் அடையார் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

விருதுகள்

  • 1993 ஆம் ஆண்டு, பாரத கலாசார நிறுவனத்தின் யுவகலா பாரதி என்ற விருது
  • 1994 ஆம் ஆண்டு, தமிழ்நாடு நல்வாழ்வு துறையின் இன்னிசை மாமணி விருது
  • 1997 – சிவகாசி திருப்புகழ் மன்றத்திலிருந்து ‘இன்னிசை ஞான வாரிதி’ பட்டம்
  • 1998 – ஸ்ரீ ராகம் ஃபைன் ஆர்ட்ஸ் வழங்கிய ‘வசந்தகுமாரி நினைவு விருது’
  • 1998 – ஆன்மீகப் பேரவையிடமிருந்து ‘நவரச கான நாயகி’ பட்டம்.
  • 1999 – தமிழ்நாடு அரசு வழங்கிய “கலைமாமணி விருது
  • 1999 – சென்னையில் உள்ள ஆந்திர சமூக மற்றும் கலாச்சார கிளப் வழங்கிய “சங்கீத சிகாமணி” பட்டம்
  • 1999 – சென்னை தெலுங்கு அகாடமி வழங்கிய ‘உகாதி புரஸ்கார் விருது’
  • 1999 – அனைத்து இலங்கை இந்து மதம் காங்கிரஸ் வழங்கிய ‘கானம்ருத வாணி” பட்டம்
  • 2001 - *கார்த்திக் நுண் கலை மன்றத்தின் இசைப் பேரொளி என்ற பட்டம்
  • 2007 ஆம் ஆண்டு, சத்யபாமா பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம்
  • பத்மா சாதனா, நாத கோவிந்தா போன்ற விருதுகள்.

மேலும் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் நடந்த சர்வதேச இசை விழாக்களில் ‘சங்கீத நாடக அகாடமி விருதுக்காக’ இருமுறை பங்கேற்ற அவர், ‘பெஸ்ட் கான்செர்ட் விருது’, ‘பெஸ்ட் பெர்ஃபாமிங் ஆர்டிஸ்ட்’, ‘பத்ம சாதனா’, ‘நாத கோவிதா’, ‘இசைக்கனல்’, ‘கானம்ரிதாகலாரசனா’, ‘சுனதாவிநோதினி’, ‘இசைக்கலைத் தாரகை’ போன்ற பல விருதுகளையும், பட்டங்களையும் வென்றுள்ளார்.

Remove ads

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads