நியாயமான பயன்பாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நியாயமான பயன்பாடு என்பது ஐக்கிய அமெரிக்காவின் சட்டங்களின்படி காப்புரிமை பெற்ற ஆக்கங்களை அவற்றின் உரிமையாளர்களின் அனுமதி பெறாமலே ஆய்வு மற்றும் கல்விப்பணிகளுக்காக பயன்படுத்தும் ஓர் கோட்பாடாகும். அது சட்டபூர்வமான,உரிமைபெறாத காப்புரிமை பெற்ற ஆக்கங்களை வேறொரு படைப்பாளி தனது பணியில் பயன்படுத்த நான்கு சோதனைகளுக்கு உட்படுத்துகிறது. இந்த சொல்லாடல் "நியாயமான பயன்பாடு" முதன்மையாக ஐக்கிய அமெரிக்காவில் பழக்கத்தில் இருந்தாலும், நாளடைவில் மற்ற நாடுகளிலும் பொது சட்டமாக அவர்கள் சட்டங்களில் இடம் பிடித்துள்ளது.
அமெரிக்க சட்டத்தின் சாதரண மொழிபெயர்ப்பு இவ்வாறு செல்கிறது:
விமரிசப்பதற்காக, மறுமொழியிட,செய்தி தெரிவிக்க,வகுப்பறை கல்விக்காக,ஆராய்ச்சிக்காக, ஓர் காப்புரிமை பெற்ற ஆக்கத்தினை படிகள் எடுத்தோ,ஒலி பதிந்தோ மற்றபிற வகைகளிலோ செய்த நியாயமான பயன்பாடு காப்புரிமை மீறிய செயல் அல்ல.இத்தகைய நியாயமான பயன்பாட்டை தீர்மானிக்க கவனித்தில் கொள்ள வேண்டிய காரணிகள்:
- நோக்கமும் வகையும் - வணிக நோக்கம் உண்டா அல்லது இலாபம் நோக்காத கல்விப்பணியா;
- காப்புரிமை பெற்ற ஆக்கத்தின் தன்மை;
- காப்புரிமை பெற்ற ஆக்கத்தின் முழுமையுடன் நோக்கில் எத்தனை அளவு அல்லது பெருமளவு எடுத்தாளப்பட்டுள்ளது;
- செயல்பாட்டினால் காப்புரிமை பெற்ற ஆக்கத்தின் பொருளியல் மதிப்பில் அல்லது வாய்ப்புள்ள சந்தையில் ஏற்படும் தாக்கம்.
ஓர் ஆக்கம் இன்னும் பதிப்பிக்கப்படவில்லை என்பது மேற்கண்ட சோதனைகளை வெற்றிகொள்ளும் பயன்பாடு நியாயமானதாக இருப்பதற்கு தடையில்லை.[1]
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகளும் உசாத்துணைகளும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads