நிர்பை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிர்பை (சமசுகிருதம்: निर्भय, Nirbhay, "பயமில்லா") ஒரு குறைஒலிச் சீர்வேக ஏவுகணையாகும். இது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் உருவாக்கப்படும் சீர்வேக ஏவுகணையாகும்.
Remove ads
வரலாறு
நிர்பை ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு மற்றும் விமான மேம்பாட்டு நிறுவனம் இணைந்து உருவாக்குக்கின்றன. இதன் உருவாக்கம் 2007 ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக தொடங்கியது. ஆனால் இது 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இவ்வகையில் இது இந்தியாவின் முதல் ஏவுகணையாகும். முதலில் இது தரையில் இருந்து ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டது. பின் இதை தரை, கடல் மற்றும் வானில் இருந்து ஏவும் வகையில் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. இந்தவகை கண்டரிவது கடினம். அமெரிக்காவின் டொமகாக் ஏவுகணை இவ்வகையை சார்ந்தது. சீர்வேக ஏவுகணைகளின் தயாரிப்பு செலவு குறைவு மற்றும் இதை அதிக அளவு குறைவான நேரத்தில் தயாரிக்கலாம் போன்ற காரணங்களால் இந்தியா இந்தவகை ஏவுகணையை உருவாக்க தொடங்கியது.
Remove ads
அமைப்பு
நிர்பை ஏவுகணை இரு நிலைகளை கொண்டுள்ளது. முதல் நிலையில் திட உக்கியும், இரண்டாம் நிலையில் சுழல்விசை விசிறியும் அமைந்துள்ளது. ஏவுகணையை ஏவும் பொழுது திட உக்கி இதை உந்தி மேலே கொண்டு செல்லும். பின் முதல் நிலை பிரிந்து இரண்டாம் நிலை இயக்கத்துக்கு வரும். அப்பொழுது அதன் இறகு விரிக்கப்பட்டு ஏவுகணை கட்டுபடுத்தப்படும். முதல் நிலை பிரிந்த பின் இரண்டாம் நிலையில் உள்ள சுழல்விசை விசிறி உந்தி செல்ல ஏவுகணைக்கு சக்தி அளிக்கும். இது மர உயர அளவு உயரத்தில் பறந்து சென்று எதிரியின் இழக்கை தாக்கி அழிக்கவல்லது.
Remove ads
உருவாக்கம்
சோதனை
ஒடிசாவின் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து மார்ச் 12 ஆம் தேதி பிற்பகல் 11.50 மணியளவில் தரையில் இருந்து செலுத்த கூடிய ஏவுகணை ஏவிப்பட்டது. அதன் அடிப்படை இலக்குகளை வெற்றிகரமாக எட்டிய ஏவுகணை 20 நிமிட பயணப்பாதையைத் தாண்டிய நிலையில் அதன் ஏவு பாதையில் இருந்து விலகியது. அதனால் சோதனை முயற்சி தோல்வியில் முடிந்தது. ஏவுகனையில் முதல் நிலை மற்றும் இறக்கை விரிப்பு ஆகிய அடிப்படை நூட்பங்களில் வெற்றிகரமாக செயல்பட்டன.[4]
அடுத்த சோதனை 2013 நவம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள்து.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads