நிர்மோகி அகாரா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நிர்மோகி அகாரா (Nirmohi Akhara) (English: "Group without Attachment")[1] இந்து சமயத்தின் வைணவப் பிரிவின் துறவியர் அமைப்பாகும். நிர்மோகி அகாரா அமைப்பை பொ.ஊ. 14-ஆம் நூற்றாண்டில் யோகி ராமானந்தர் நிறுவினார்.[2]இது அனைத்திந்திய சாதுக்கள் கூட்டமைப்பில் உள்ள 24 துறவியர் அமைப்புகளில் ஒன்றாகும்.

அயோத்தி பிரச்சினை

1949-இல் நிர்மோகி அகாரா துறவியர் அமைப்பினர் ராம ஜென்ம பூமியில் உள்ள பாபர் மசூதியில் குழந்தை இராமர் திருவுருவச் சிலையை நிறுவி வழிபட்டனர்.[3]

தொடுத்த வழக்குகள்

நிர்மோகி அகாராவினர் ராம ஜென்ம பூமியில் இருந்த இந்துக் கோயில் பகுதி மீது 16-ஆம் நூற்றாண்டில் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளதும், எனவே அவ்வளாகத்தில் இராமர் கோயிலில் கட்டி தொடர்ந்து இந்துக்கள் வழிபாடு நடத்த கோயில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று 1885-இல் அயோத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இரு சமயங்களின் வழிபாட்டிடங்கள், அருகருகில் இருப்பினை பொது அமைதிக்கு குந்தகம் விளையும் எனக் கூறி நிர்மோகி அகாராவின் கோரிக்கையை அயோத்தி நீதிமன்றம் ஏற்கவில்லை.[4]

அயோத்தி சிக்கலில் உள்ள பாபர் மசூதி வளாகத்தில் இராமர் சிலை நிறுவி வழிபாடு நடத்தக் கோரி 1989-இல் உத்தரப் பிரதேச அரசு மீது வழக்கு தொடர்ந்தது.[5]

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 30 செப்டம்பர் 2010 அன்று அயோத்தி பிரச்சினையில் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரித்து மனுதாரர்களான ராம் லல்லா, நிர்மோகி அகாரா மற்றும் சுன்னி வக்ஃப் வாரியத்துக்கு சரிசமமாக பிரித்து தீர்ப்பளித்தது.. [6] [3][7]

இத்தீர்ப்பினை எதிர்த்து நிர்மோகி அகாரா அமைப்பினர், பிரச்சினைக்குரிய மொத்த இடத்தையும் தங்களுக்கே வழங்க வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். 09 நவம்பர் 2019 அன்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஒருமனதாக, பிரச்சனைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் எந்த அமைப்புக்கும் சொந்தம் இல்லை என்றும், இந்திய அரசுக்கு மட்டுமே உரியது என்றும், இந்திய அரசு ஒரு இந்து சமய அமைப்பிடம் இந்நிலத்தை வழங்கி இராமர் கோயிலைக் கட்டிக் கொள்ளலாம் என்றும், இசுலாமியர்களுக்கு மசூதி கட்டிக் கொள்ள அரசு அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தரவேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியது.[8][9]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads