அசுபால்ட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அசுபால்ட்டு (asphalt, /ˈæsfɔːlt/ (ⓘ) அல்லது /ˈæʃfɔːlt/ அல்லது /ˈæsʃfɛlt/) மாற்றுச்சொல் பிற்றுமின் (bitumen, /ˈbɪtʃʊmən/), என்பது பாறை எண்ணெயின் ஒட்டிக்கொள்ளும் கருநிற உயரிய பிசுக்குமைத் தன்மையுடைய நீர்ம அல்லது குறை திண்ம ஒரு வடிவம் ஆகும். இது இயற்கையாகவும் காணப்படுவதுண்டு; அல்லது தூய்மைப்படுத்தப் பட்ட நிலையிலும் பெறலாம். இது கரிப்பிசினின் வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனை அசுபால்லடம் என்றும் தார் என்றும் அழைப்பதுண்டு.[1]


அசுபால்ட்டு/பிற்றுமின்னின் முதன்மைப் பயன்பாடு சாலை கட்டமைப்பாகும். இதனை சாலையிடப் பயன்படுத்தப்படும் சல்லிக்கற்களை பிணைக்கும் பிசினாகப் பயன்படுத்தி அசுபால்ட்டு பைஞ்சுதை உருவாக்கப்படுகிறது. அடுத்து சாய் கூரைகளின் இணைப்புகள், சமநிலை மேற்கூரைகளின் தளங்களில் நீர்புகா கட்டமைப்புக்களுக்கு அசுபால்ட்டு பயன்படுத்தப்படுகிறது.
இயற்கையில் கிடைக்கும் அசுபால்ட்டு/பிற்றுமின் சிலநேரங்களில் "கச்சா பிற்றுமின்" எனப்படுகிறது. இதன் பிசுக்குத்தன்மை குளிர்ந்த கரும்புப்பாகு போன்றுள்ளது[2][3] பாறை எண்ணெயை 525 °C (977 °F)]க்கு காய்ச்சி வடித்த பிற்றுமின் "தூய்மித்த பிற்றுமின்" எனப்படுகிறது.
Remove ads
மேற்சான்றுகள்
நூற் கோவை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads